சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி வெளியாக உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன.
இதனிடையே, தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்றுள்ளது. கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதன்படி மயிலாப்பூர், தளி, மொடக்குறிச்சி, உதகமண்டலம், அவிநாசி, திருப்பூர் தெற்கு, கோவை வடக்கு, கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், மதுரை தெற்கு, சாத்தூர், திருச்செந்தூர், வாசுதேவநல்லூர், ராதாபுரம், நாகர்கோவில், விளவங்கோடு, ஆவடி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், அறந்தாங்கி, மானாமதுரை, ராமநாதபுரம், குளச்சல், பத்மநாபபுரம், ராசிபுரம் (தனி) ஆகிய தொகுதிகளில் பாஜக போட்டியிட உள்ளது.
இந்நிலையில், 27 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியாகும்? என்பது குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன், பாஜக வேட்பாளர் பட்டியலை வெகுவிரைவில் வெளியிட உள்ளோம். நான் நாளை டெல்லி செல்லும் திட்டமில்லை. டெல்லி செல்லும்போது கண்டிப்பாக செய்தியாளர்களுக்கு தெரியப்படுத்துவேன்’ என்றார்.
