பாமக வரைவு தேர்தல் அறிக்கை தயார்; அன்புமணியிடம் சமர்ப்பிப்பு

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக இடம்பெற்றுள்ளது.

இதனிடையே, சட்டசபை தேர்தலுக்கான பாமக தேர்தல் அறிக்கை அக்கட்சியின் முன்னாள் எம்.பி. செந்தில் தலைமையிலான குழு தயாரித்தது.

இந்நிலையில், பாமக வரைவு தேர்தல் அறிக்கை தயாரான நிலையில் அதை அக்கட்சியின் தலைவர் அன்புமணியிடம் இன்று சமர்ப்பிக்கப்பட்டது. முன்னாள் எம்.பி. செந்தில் தலைமையிலான தேர்தல் அறிக்கை குழுவினர் வரைவு தேர்தல் அறிக்கையை பாமக தலைவர் அன்புமணியிடம் இன்று சமர்ப்பித்தனர்.

Source link