பாலியல் தொல்லை கொடுத்து வேலைக்கார பெண் குத்திக்கொலை-துணை நடிகருக்கு வலைவீச்சு

மும்பை,

மும்பையை அடுத்த தானே மாவட்டம் காஷிமிரா பகுதியை சேர்ந்தவர் சுமன்(வயது 36). இவர் நேற்று முன்தினம் தான் வேலை செய்யும் வீட்டில் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்டார். போலீசார் நடத்திய விசாரணையில் வீட்டில் வசித்து வந்த துணை நடிகர் ஆஷிஸ் மேஷ் ராம் (42) வேலைக்கார பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார்.

இதில் அதிர்ச்சி அடைந்த பெண் வேலைக்கு செல்வதை நிறுத்தினார். மேலும் துணை நடிகரின் செயல் குறித்து அவரது அண்ணனிடம் புகார் அளித்தார். அதற்கு அவர், துணை நடிகர் இனி வீட்டுக்கு வரமாட்டார் என்று கூறி சமாதானம் செய்தார். இந்தநிலையில்தான், நேற்று முன்தினம் வேலைக்கார பெண், மீண்டும் வீட்டுக்கு வந்ததை தெரிந்து கொண்ட துணை நடிகர் அங்கு சென்று வேலைகார பெண்ணை கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவு ஆன துணை நடிகரை தேடி வருகிறார்கள்

Source link