பிஎஸ்எல் – உஸ்மான் தாரிக் வீசிய பந்து… மீண்டும் மீண்டும் விலகி சென்ற மிட்செல் – பாராட்டிய இந்திய முன்னாள் வீரர்

சென்னை,

பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) 2026 தொடரில், குவெட்டா கிளாடியேட்டர்ஸ் மற்றும் ராவல்பிண்டி அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் (Daryl Mitchell) செய்த ஒரு செயலை இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார்.

குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியின் பந்துவீச்சாளர் உஸ்மான் தாரிக் (Usman Tariq), பந்தை வீசுவதற்கு முன் சற்று அதிக இடைநிறுத்தத்தை (pause) மேற்கொண்டதாக தெரிகிறது. இதனால், குழப்பமடைந்த டேரில் மிட்செல் பந்தை எதிர்கொள்ளாமல் விலகிச் சென்றார். தொடர்ந்து இரண்டு முறை பந்தை எதிர்கொள்ளாமல் விலகினார். இதனால் நடுவர்கள் மிட்செலிடன் வந்து பேசினர். பின்னர் மீண்டும் ஆட்டம் தொடர்ந்தது.

Also Read
இத்தாலி கால்பந்து அணிக்கு பயிற்சியாளர் நியமனம்
பிஎஸ்எல் - உஸ்மான் தாரிக் வீசிய பந்து... மீண்டும் மீண்டும் விலகி சென்ற மிட்செல் - பாராட்டிய இந்திய முன்னாள் வீரர்

இந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பேசிய அஸ்வின், “பேட்டர்கள் இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் பந்தை எதிர்கொள்ளாமல் விலகுவது அவர்களுடைய உரிமை. மிகச் சிறப்பாக செய்தீர்கள் மிட்செல்” என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

Source link