பியூஸ் கோயல் அவசர அழைப்பு- ஹெலிகாப்டரில் சென்னை வந்தார் அண்ணாமலை

சென்னை,

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து தமிழக பாஜக வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் சென்னை கமலாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமை தாங்கினார்.

ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 3 பேர் அடங்கிய பட்டியல் தேசிய தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனடிப்படையில் பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மத்திய மந்திரியும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஸ் கோயல் தலைமையில் சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் பாஜக மையக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி. மத்திய மந்திரி அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் ஆகியோர் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்றுள்ளதாக என தெரிகிறது.இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக அண்ணாமலைக்கு பியூஸ் கோயல் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பின் பேரில் புதுச்சேரியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த அண்ணாமலை அவசர அவசரமாக ஹெலிகாப்டர் மூலம் சென்னைக்கு வந்தடைந்துள்ளார்.

அவர் கமலாலயத்தில் நடைபெற்று வரும் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். இந்த கூட்டத்தில் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

Source link