சென்னை,
விருதுநகர் மக்களவை காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
மக்கள் வரிப்பணம் —
அரசியல் மேடைகளுக்கா?
ஒரே நாள் நிகழ்ச்சிக்கு
ரூ.30 கோடியை தாண்டும் செலவு.
மேடைகள் உயர்ந்தன,
விளம்பரங்கள் முழங்கின,
ரோடு ஷோக்கள் பிரகாசித்தன.
ஆனால் மக்கள் வாழ்க்கை?
விலைவாசி உயர்வு,
வேலைவாய்ப்பு குறைவு,
இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறி.
ஆட்சியின் கடமை
மக்களின் வாழ்வை உயர்த்துவது;
அரசியல் காட்சிகளை அல்ல.
ஆனால் இன்று
பிரதமர் மோடியின் வருகைக்காக
கோடிகள் செலவழிக்கப்படும் அரசியல் கலாசாரம் உருவாகிறது.
இந்த கலாசாரம்
தமிழ்நாட்டில் வேரூன்றக்கூடாது.
ஏனெனில்
தமிழ்நாடு என்பது
மக்கள் நல ஆட்சியின் மண்,
மாநில உரிமைகளின் குரல்.
அதனால் தான்
பாஜக/அதிமுக கூட்டணியை
அரசியல் ரீதியாகத் தடுக்க வேண்டியது அவசியம்.
மக்கள் பணம் புனிதம்.
அதை காக்கும் பொறுப்பு
மக்களிடமே உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
