பிரதமர் மோடியிடம் பேசி மெட்ரோ ரெயில் திட்டத்தை கோவைக்கு கொண்டு வருவோம்: எஸ்.பி.வேலுமணி

கோவை,

கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கோவை மாவட்டத்துக்கு திமுக அரசு எந்த திட்டத்தையும் செய்ய வில்லை. ஆனால் கோவைக்கு அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா, எடப் பாடி பழனிசாமி ஆகியோர் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி கொடுத்தனர். அவினாசி சாலை புதிய மேம்பாலம், அத்திக்கடவு- அவினாசி திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குளங்களை மேம்படுத்தினோம்.

திமுக அரசு மக்கள் தொகை குறித்து சரியான முறையில் அறிக்கை தாக்கல் செய்யாததால் கோவை மெட்ரோ ரெயில் திட்டம் கைவிடப்பட்டது. எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக வந்ததும் பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்து கோவைக்கு மெட்ரோ ரெயில் திட்டத்தை கொண்டு வருவோம். திமுக மக்களை ஏமாற்றி வருகிறது. சிறுபான்மை மக்களுக்கு திமுக ஒன்றும் செய்யவில்லை.

தேர்தலுக்காக மத்திய அரசு நிறுத்திவிடும் என்று கூறி மகளிர் உரிமைத்தொகை ரூ.5 ஆயிரம் வரவு வைத்து உள்ளார்கள். கரூர் சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு கரூர் சென்று இதுவரை த.வெ.க. தலைவர் விஜய் ஆறுதல் தெரிவிக்கவில்லை. அதிமுக மட்டுமே மக்களுக்கு பாதுகாப்பான கட்சி. இவ்வாறு அவர் கூறினார்.

Source link