பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டுவால் காலமானார்

‘தி காட்பாதர்’, ‘அபோகாலிப்ஸ் நவ்’ உள்ளிட்ட பல உலகப் புகழ் பெற்ற திரைப்படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர் நடிகர் ராபர்ட் டுவால். 1983-ஆம் ஆண்டு வெளியான ‘டெண்டர் மெர்சீஸ்’ திரைப்படத்தில் நாட்டுப்புறப் பாடகர் வேடத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை வென்றார். மேலும் ‘தி அப்போஸ்தல்’ உள்ளிட்ட சில படங்களை இயக்கியும் உள்ளார்.

இந்த நிலையில், 95 வயதானராபர்ட் டுவால் நேற்று தனது வீட்டில் காலமானார். மூத்த ஹாலிவுட் நடிகர்களில் ஒருவரான ராபர்ட் டுவால் மறைந்த செய்தி சினிமா உலகை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

இந்த நிலையில், அவரது மனைவி லூசியானா டுவால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது அன்புக்குரிய கணவர், சிறந்த நண்பர் மற்றும் நம் காலத்தின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவருக்கு நாங்கள் விடை கொடுத்தோம். வீட்டில் அன்பானவர்களால் சூழப்பட்ட நிலையில் அமைதியாக மறைந்தார். உலகிற்கு அவர் ஒரு ஆஸ்கார் விருது பெற்ற நடிகர், இயக்குனர் மற்றும் கதைசொல்லி. ஆனால் எனக்கு அவர் எல்லாமும் ஆனவர்” என்று தெரிவித்துள்ளார்.

Source link