பிரியதர்ஷனின் 100-வது படத்தில் இணைந்த மோகன்லால்

சினிமாவில் 42 ஆண்டுகளாக இயக்குநராக இருக்கும் மலை​யாள இயக்​குநர் பிரியதர்ஷன் தமிழில், கோபுர வாசலிலே, சினேகி​தி​யே, லேசா லேசா, காஞ்​சிவரம், நிமிர், அப்​பத்தா ஆகிய படங்​களை இயக்​கி​யுள்​ளார். இந்தியிலும் பல படங்​களை இயக்​கி​யுள்ள இவர் இப்​போது, அக் ஷய் குமார் நடிப்​பில் ‘பூத் பங்​களா’ எனும் காமெடி படத்தை இயக்கி இருக்​கிறார். அக்ஷய்​கு​மார், சைப் அலி​கான் நடிப்​பில் ‘ஹை​வான்’ என்ற படத்​தை​யும் இயக்​கி​யுள்​ளார். இது அவருக்கு 97-வது படம். அவரது 98- வது படத்​தில் பங்​கஜ் திரி​பா​தி, அன்னு கபூர், சவுரப் சுக்லா நடிக்க இருக்​கின்​றனர்.

1984-ல் ‘பூச்சாக்கொரு மூக்குத்தி’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தற்போது வரை 99 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.இவர் இயக்கிய முதல் திரைப்படத்தின் நாயகனாக மோகன்லால் நடித்திருந்தார். தொடர்ந்து, மோகன்லாலை வைத்து மின்னரம், தென்மாவின் கொம்பத், காலாபாணி, ஒப்பம் போன்ற பல ஹிட் படங்களைக் கொடுத்தார்.

தமிழில் நடிகர் பிரகாஷ் ராஜை வைத்து இவர் இயக்கிய ‘காஞ்சிவரம்’ திரைப்படத்திற்காக சிறந்த படம், சிறந்த தயாரிப்பாளர் பிரிவில் தேசிய விருது பெற்றார். இந்திய சினிமாவிற்கு அதிகமான பங்களிப்பைச் செய்த இயக்குநர்களில் ஒருவரான பிரியதர்ஷனுக்கு மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.

அவர் சமீபத்தில் அளித்​த பேட்​டி​யில், தனது முதல் படத்​தில் நடித்த மோகன்​லால் தன்​னுடைய 100 -வது படத்​தி​லும் கதா​நாயக​னாக நடிப்​பார் என்று தெரி​வித்​திருந்தார். நாங்​கள் மீண்​டும் இணை​யும் படம் இசையை அடிப்​படை​யாகக் கொண்​ட​தாக இருக்​கும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது பிரியதர்ஷன் தன் 100-வது திரைப்படத்தை இயக்கவுள்ளார். ஆசிர்வாத் சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்தில் நாயகனாக மோகன்லால் நடிக்கிறார். தன் முதல் படத்தின் நாயகனையே தன் 100-வது திரைப்படத்திலும் இயக்கவுள்ள இயக்குநர் என்கிற புதிய உலக சாதனையையும் இதன் மூலம் பிரியதர்ஷன் நிகழ்த்தவுள்ளது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.



Source link