பெங்களூரு,
பிளிப்கார்ட் தனது ‘மினிட்ஸ்’ மூலம் ஒரு லிட்டர் பாலை வெறும் ரூ. 1-க்கு விற்கும் அதிரடி விளம்பரச் சலுகையைத் தொடங்கியது. இது தொடர்பாக பெங்களூரு பால் யூனியன் தலைவர் டி.கே. சுரேஷ் அவர்கள் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரு பால் யூனியன் தலைவர் டி.கே. சுரேஷ், இந்த விளம்பரத்திற்கு எதிராக இந்திய போட்டி ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும். பால் விவசாயிகள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் மீதான அதன் பாதிப்பு குறித்து விசாரணை நடத்த கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். மேலும் கொள்ளையடிக்கும் விலை நிர்ணயம் என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அந்த நிறுவனம் தனது முதலீட்டாளர் நிதியை பயன்படுத்தி இதை குறைந்த விலைக்கு கொடுப்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஈர்க்கப்படுகிறார்கள். பாலை இவ்வளவு குறைந்த விலைக்கு விற்பது, விவசாயிகளின் கடின உழைப்பையும் பாலின் மதிப்பையும் குறைப்பதாகவும் என குற்றம் சாட்டியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து பிளிப்கார்ட் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில் கூறியதாவது:-
இது ஒரு நிரந்தர விலை அல்ல, வாடிக்கையாளர்களுக்குப் பயனளிக்கும் வகையில் அவ்வப்போது நடத்தப்படும் தற்காலிக விளம்பர பிரசாரம் மட்டுமே. இதன் மூலம் பால் உற்பத்தியாளர்கள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சிறு விற்பனையாளர்களின் சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்தவே இந்த விளம்பரம் என்று அந்நிறுவனம் பதில் அளித்துள்ளது.
