பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த ஒருவர் பலி

பாட்னா,

பீகார் மாநிலத்தில் முழு மதுவிலக்கு அமலில் உள்ளது. நிதிஷ்குமார் தலைமையிலான அரசு கடந்த 2016-ம் ஆண்டு முதல் மதுவிலக்கை அமல்படுத்தியது.

இந்த நிலையில் அங்குள்ள கிழக்கு சம்பாரண் மாவட்டத்தின் ரகுநாத்பூர் பகுதியைச் சேர்ந்த சந்து (வயது 45) என்பவர் கள்ளச்சாராயம் குடித்ததாக தெரிகிறது. இதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோல் கள்ளச்சாராயம் குடித்த மேலும் 2 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Source link