புதுச்சேரியில் என்ன நடக்கிறது? வேட்பாளர்கள் திடீர் தலைமறைவு – காங்கிரஸ் – திமுக கூட்டணி உடையும் அபாயம்! – puducherry dmk-congress alliance form a & form b election process issue

புதுச்சேரியில் திமுக காங்கிரஸ் தொகுதி பங்கீடு முடிவடைந்த நிலையிலும் கூட்டணிகள் சிக்கல் நீடித்து வருகிறது. இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

புதுச்சேரி திமுக- காங்கிரஸ்(புகைப்படங்கள்Samayam Tamil)
புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் திமுக அங்கம் வகித்து வருகிறது. இந்த நிலையில் 2026க்கான சட்டமன்ற தேர்தலில் திமுக அதிக இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளதால் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. காங்கிரஸ்- திமுக இடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடந்த பிறகு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டது.

அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகளும், திமுகவுக்கு 12 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்டுக்கு 1தொகுதியும், விசிகவுக்கு 1 தொகுதி ஒதுக்க முடிவாகி உள்ளது. இந்த சூழலில், தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் இழுப்பறி நீடித்ததால் கடந்த 16ஆம் தேதி முதல் இரண்டு கட்சி வேட்பாளர்கள் சார்பில் ஏ மற்றும் பி படிவத்துடன் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வகையில் நேற்று இறுதி நாள் என்பதால் இரு கட்சி வேட்பாளர்களும் அவரது ஆதரவாளர்களுடன் வந்து மனு தாக்கல் செய்தனர்.

ஒவ்வொரு கட்சிக்கும் திமுக போடும் Strategy!

இந்த சூழலில் காங்கிரஸ் கட்சிக்கு 30 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை ஏ மற்றும் பி படிவங்களுடன் முன்மொழிந்துள்ளது. திமுகவும் பெரும்பாலான தொகுதிகளுக்கு இதே படிவங்களை வழங்கி வேட்பாளர்களை தாக்கல் செய்யச் சொல்லி உள்ளது. இதனால் கூட்டணிக்கு இடையே இப்போது பெரிய குழப்பமும், சலசலப்பு உருவாகி உள்ளது .வேட்புமனக்களுக்கு ஏ மற்றும் பி படிவங்களை வழங்கிய காங்கிரஸ் திமுக கட்சி தாங்கள் வேட்பாளர்களை மனுவை வாபஸ் பெற சொல்ல ஆரம்பித்துள்ளது.
ஆனால் பி படிவத்துடன் மனுவை தாக்கல் செய்த சில வேட்பாளர்கள் தங்களது மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்து தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் வேட்பாளர்களை இரு கட்சிகளும் தேடிக் கொண்டு வருகின்றன.மனு வாபஸ் பெறவிட்டால் கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்தாலும், கூட்டணி முறியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 2வது தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
மனு பரிசீலனையில் இது நடைமுறை பின்பற்றப்படும் காங்கிரஸ்- திமுக வேட்பாளர்கள் ஒருமித்த கருத்தில் வைக்க முடியாவிட்டால் அதே பகுதியில் இரண்டு வேட்பாளர்கள் நிற்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் கூட்டணி உடையும் அபாயம் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றன. மேலும் வேப்பமனுக்கள் பரிசீலனை இன்று நடக்கிறது 26 ஆம் தேதிக்குள் வேட்பாளர்கள் மனுவை வாபஸ் பெற வேண்டும். இதற்குள் இரு கட்சிகளும் சமாதானம் செய்து மனுக்களை வாபஸ் பெற முயற்சி செய்து வருகின்றன.
காங்கிரஸ்- திமுக தவறுதலாக பி படிவங்களை வாரி வழங்கியதும் குழப்பத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு கட்சிக்கும் வேட்பாளர்களுக்கு ஒரு ஏ படிவம் மற்றும் இரண்டு பி படிவம் வழங்கப்படும். மேலும் ஏ படியும் மற்றும் ஒன்று பி படிவத்தை தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.மற்றொரு பி படிவத்தை தலைமை தேர்தல் அதிகாரியிடம் கொடுக்கப்பட வேண்டும்.
மனு தாக்கல் முடியும் நேரம் மூன்று மணிக்குள் பட்டியலை அரசியல் கட்சிகள் சமர்ப்பிக்க வேண்டும் இல்லை எனில் கட்சி சமர்ப்பித்த பி படிவங்கள் மட்டுமே கணக்கில் சேர்க்கப்படும். மனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் மட்டுமே வாபஸ் பெற முடியும். ஒரே தொகுதிக்கு ஒரே கட்சியை சேர்ந்த இரண்டு வேட்பாளர்கள் பி படிப்பத்துடன் மனு தாக்கல் செய்திருந்தால் முதலில் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொள்ளப்படும் இதுவே தற்போது திமுக காங்கிரஸ் இரு கட்சிகளுக்கும் ஏற்பட்ட நிலைமை.