புதுச்சேரியில் களமிறங்கும் அஇபுதமமுக.. வேட்பாளர்களை அறிவித்த சசிகலா – யார்? யார்? – sasikala has released the list of candidates contesting the puducherry elections

அஇபுதமமுக சார்பில் புதுச்சேரி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சித் தலைவர் சசிகலா வெளியிட்டார்.

சசிகலா கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு(புகைப்படங்கள்Samayam Tamil)
தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, புதுச்சேரியில் 30 சட்டமன்ற தொகுதிகளுக்காக,வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்

இந்த நிலையில் இன்றுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைய உள்ளது. இந்த சூழலில்,புதுச்சேரியை பொறுத்தவரை என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், அதிமுக, பாஜக, லட்சிய ஜனநாயக கட்சிகள் அங்கம் வகிக்கிறது.தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குறித்து என்.ஆர். காங்கிரஸ் கூட்டணியில் நீண்ட இழுபறிக்கு பிறகு,பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது. அதன்படி, என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 16, பாஜக 10 மற்றும் அதிமுக ,ஜோஸ் மார்ட்டினின் லட்சிய ஜனநாயக கட்சிக்கு தலா 2 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது.

இவங்க மூணு பேருக்கு சீட்டு கன்ஃபார்ம்…டிக் அடித்த ஸ்டாலின்!

கூட்டணி அரசியல்

இது ஒருபுறம் இருக்க,தமிழ்நாட்டை போன்று புதுச்சேரியிலும் திமுக – காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தையில் வார்த்தை மோதல் ஏற்பட்டு உள்ளது.இதனைத் தொடர்ந்து, ப. சிதம்பரம் அவரச அவரசமாக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார்.இதனைத் தொடர்ந்து விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமுன் புதுச்சேரியில் தனித்து களமிறங்க உள்ளது. அதற்கான வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டது.
குறிப்பாக தமிழகத்தை பொறுத்தவரை இரண்டு பெரிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளது. அதன்படி திமுக தலைமையில் காங்கிரஸ், மதிமுக ,விசிக உள்ளிட்ட 20 கட்சிகளுக்கு மேல் கூட்டணி அமைத்துள்ளது. அதேபோல் அதிமுக தலைமையில் பாஜக அன்புமணி தரப்பு பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இது கிடையே தமிழக வெற்றிக்கழகம் விஜயின் தலைமையில் மூன்றாவது கூட்டணி உருவாகுமா? என்று எதிர்பார்க்கப்பட்டது.

சசிகலா – ராமதாஸ் கூட்டணி வியூகம்

இந்த சூழலில், தமிழகத்தில் நான்கு முணை போட்டி நிலவும் என்று கூறப்பட்ட வந்த நிலையில், ராமதாஸ்- சசிகலாவில் புதிய கூட்டணி புதிய கட்சியாக உருவாகி உள்ளது. இது அரசியல் களத்தில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்த போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்த சூழலில், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் சசிகலாவின் அஇபுதமமுக களமிறங்கியுள்ளது.அதற்கான வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டு உள்ளது.

புதுச்சேரி அஇபுதமமுக வேட்பாளர்கள் பட்டியல்:

1) நெட்டப்பாக்கம் (தனி) (22) Dr. K. சிலம்பரசன்
2) வில்லியனூர் (5) :திரு.M. நந்தகோபால்
3) உழவர்கரை (6:திருமதி. M.U. லாவண்யா
4) இந்திரா நகர் (8) :திரு. S. ஜெயபால் (எ) செங்கேணி உள்ளிட்டோர் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
sa
இது குறித்து சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதவாது: அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 09.04.2026 அன்று நடைபெற உள்ள புதுச்சேரி மாநில சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாகக் கீழ்கண்டவர்கள் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இதனால் புதுச்சேரி அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.