புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் இன்று பரப்புரை..-11 நிபந்தனைகள் ஏன்? என்ன நடக்கிறது? – tvk leader vijay is scheduled to campaign in puducherry today

புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் இன்று பரப்புரை செய்ய உள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

puduccherry vijay visit(புகைப்படங்கள்Samayam Tamil)
புதுச்சேரியில் மொத்தம் 30 சட்டமன்ற தொகுதிகளை காண தேர்தல் வரும் ஏப்ரல் ஒன்பதாம் தேதி நடைபெற உள்ளது மே நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களை உள்ள நிலையில் புதுச்சேரிக்கு அரசியல் கட்சி தலைவர்கள் படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில், நேற்று பிரதமர் நரேந்திர மோடி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சார மேற்கொண்டார். இதனை தொடர்ந்து ரோடு ஷோ நடத்தினார். இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் .தமிழகத்தை போன்றும் புதுச்சேரியிலும் தனித்து களமிறங்க உள்ளது தமிழக வெற்றிக் கழகம்.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்

மேலும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஏப்ரல் 5ம் தேதி 23 இடங்களில் பிரச்சாரம் நடத்த புதுச்சேரி காவல்துறையினரிடம் அனுமதி கூறியிருந்தது. ஆனால், முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படும் என்று கூறி, தமிழக வெற்றி கழக நிர்வாகிகளிடம் ஏப்ரல் 4-ம் தேதி விஜய் பரப்புரையை நடத்திக் கொள்ள வலியுறுத்தினர். இதனை ஏற்றுக் கொண்ட தவெக தலைவர் விஜய் இன்று புதுச்சேரியில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். மேலும் விஜய்க்கு புதுச்சேரி காவல்துறை என பிரச்சாரம் நடத்துவதற்கு 11 நிபந்தனைகளை கடுமையாக விதித்துள்ளனர்.

புது பிளான் என்ன?நாளுக்கு நாள் வலுவாகும் TVK

புதுச்சேரி காவல்துறை விதித்த 11 நிபந்தனைகள்:
  • விஜய் பிரச்சாரம் செய்ய நான்கு இடங்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
  • கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரிக்கு வரும்போது கொக்கு பார்க், வெங்கடாசுப்பா ரெட்டி சிலை சதுரங்கம், தவளைகுப்பம் சந்திப்பு, வில்லியனூர்- கூடப்பாக்கம் சந்திப்பு ஆகிய இடங்களில் மட்டும் வேனில் இருந்தபடி பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • குறிப்பாக பிரச்சாரம் காலை 9.30 மணிக்கு ஆரம்பித்து மதியம் 1.30 மணிக்கு முடிக்க வேண்டும்.
  • ஒவ்வொரு இடத்திலும் சுமார் 2000 பேர் மட்டுமே கூட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • தமிழகத்திலிருந்து ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் வரக்கூடாது.
  • புதுச்சேரி மக்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும்.
  • விஜய் பேசும் இடங்களுக்கு கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளை அழைத்து வர அனுமதியில்லை.
  • மேலும் குடிநீர் பாட்டில்கள் பிஸ்கட் மற்றும் ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்ய வேண்டும்.
  • அனுமதி கிடைத்த இடங்களில் மட்டும் பேனில் மேல் நின்று பேச வேண்டும் மற்ற இடங்களில் ஏறக்கூடாது.
  • ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் பிரச்சார பேனை பின் தொடரக்கூடாது
  • நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பிரச்சாரம் முடிந்த பின்னர் சென்னை திரும்ப வேண்டும்.
புதுச்சேரியில் விஜய் இன்று பரப்புரை

தவெக தலைவர் விஜய் இன்று புதுச்சேரி மாநில சட்டமன்றத் தொகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.
காலை 10 மணிக்கு புதுவை தட்டாஞ்சாவடி, 11 மணிக்கு கடலூர் சாலை, இன்று பகல் 12 மணிக்கு தவளக்குப்பம் ஜங்ஷன் பகுதியில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பரப்புரை செய்கிறார்.
தேர்தல் ஆணைய விதிகளின்படி பரப்புரையில் 5,000 பேருக்கு மேல் அனுமதி இல்லை என தவெக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் சட்டமன்ற தேர்தல் திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி என்று விஜய் கூறி வரும் நிலையில், புதுச்சேரியில் விஜய் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.