புதுச்சேரியில் நாளை தேர்தல்: ஏற்பாடுகள் குறித்து தேர்தல் அதிகாரி விளக்கம்

புதுச்சேரி,

புதுச்சேரி தேர்தல் துறை, அதன் மாவட்ட மற்றும் தேர்தல் அதிகாரிகள் மூலம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. வாக்குப்பதிவு குழுக்களும் பொருட்களும் சரியான நேரத்தில் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்படுவதால், இந்த தேர்த்லில் 1,099 வாக்குச்சாவடிகளில் ட்ரோன்கள் மற்றும் 110 கள அலுவலர்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.

தேர்தலில் வாக்காளர்கள் அச்சமின்றி மற்றும் தடையின்றி வாக்களிப்பதை உறுதி செய்ய இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு பல அடுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துகிறது. மேலும் இந்த தேர்தலில் 209 வாக்குச்சாவடிகள் பாதிக்கப்படக்கூடியவை என கண்டறியப்பட்டு, அங்கு மத்திய ஆயுதப்படை காவலர்கள் மற்றும் உள்ளூர் போலீஸார் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மேலும் 48 மணி நேர அமைதி காலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் கடுமையாக அமல்படுத்தப்படுகின்றன. பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது, மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன, மேலும் விதிமீறல்களை உடனுக்குடன் கண்காணிக்க ட்ரோன்கள், பறக்கும் படைகள் மற்றும் உதவி எண் பயன்படுத்தப்படுகின்றன என கூறினார்.

புதுச்சேரியிலிருந்து வெகு தொலைவில் உள்ள மாஹே மற்றும் ஏனாம் போன்ற பகுதிகளில் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பகுதிகளில் இருந்து வரும் ட்ரோன் காட்சிகள் 4K தரத்தில் நேரடியாக கண்காணிக்கப்பட்டு வருவதாக தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் தெரிவித்தார்.

Source link