புதுச்சேரி,
புதுச்சேரி சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 9-ந் தேதி நடைபெற இருக்கிறது. ஆளும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியுடன் பா.ஜ.க. கூட்டணி தொடர்கிறது. அ.தி.மு.க., லட்சிய ஜனநாயக கட்சி ஆகியவை இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. இதில், என்.ஆர்.காங்கிரஸ் 16, பா.ஜ.க. 10, அ.தி.மு.க. 2, லட்சிய ஜனநாயக கட்சி 2 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
இதேபோல், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. கூட்டணி தொடர்கிறது. இந்தக் கூட்டணியில், காங்கிரஸ் 16, தி.மு.க. 14 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில், தி.மு.க. போட்டியிடும் 6 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் நட்பு ரீதியில் போட்டியிடுகிறது. தி.மு.க. தனக்குள்ள தொகுதியில் இருந்து ஒன்றை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கொடுத்துள்ளது. மேலும், 2 தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனியாக போட்டியிடுகிறது. இதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 2 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை தலா 1 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், நேயம் மக்கள் கழகத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதில், தமிழக வெற்றிக் கழகம் 28 தொகுதிகளிலும், நேயம் மக்கள் கழகம் 2 தொகுதிகளிலும் களம் காண்கிறது. இயக்குனர் சீமானின் நாம் தமிழர் கட்சி மாகே, ஏனாம் தவிர்த்து ஏனைய 28 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகின்றது. மேலும், பா.ம.க.வின் ஒரு பிரிவான டாக்டர் ராமதாஸ் அணியும், சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகமும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அந்த வகையில், அனைத்தந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
வேட்புமனு தாக்கல் கடந்த 23-ந் தேதி (திங்கட்கிழமை) முடிவடைந்த நிலையில், 24-ந் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் இன்று நிறைவடைந்த நிலையில், 30 தொகுதிகளிலும் களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
1.லாஸ்பேட்டை
என்.ஆர்.காங்கிரஸ் – சிவகொழுந்து
காங்கிரஸ் – எம்.வைத்தியநாதன்
பா.ம.க. – பி.ஏழுமலை
மா. கம்யூ. கட்சி – ஆர்.ராஜாங்கம்
த.வெ.க. – வி.சாமிநாதன்
நாம் தமிழர் கட்சி – கா.ஜெயசித்ரா
2.காரைக்கால் தெற்கு
பா.ஜ.க. – எம்.அருள் முருகன்
தி.மு.க. – ஏ.எம்.எச்.நாஜிம்
காங்கிரஸ் – சக்திவேல் பிரபு
த.வெ.க. – கே.ஏ.யு.அசனா
நாம் தமிழர் கட்சி – மரி அந்துவான்
3.நெட்டப்பாக்கம் (தனி)
என்.ஆர்.காங்கிரஸ் – ராஜவேலு
காங்கிரஸ் – அன்பரசன்
பா.ம.க. – ஜெயசந்திரன்
த.வெ.க. – எல்.பெரியசாமி
நாம் தமிழர் கட்சி – செ.ஞானப்பிரகாசம்
விடுதலை சிறுத்தைகள் கட்சி – அமுதவன்
அ.இ.பு.த.ம.மு.க. – டாக்டர் கே.சிலம்பரசன்
4.திருபுவனை (தனி)
என்.ஆர்.காங்கிரஸ் – கோபிகா
தி.மு.க. – பி.அங்காளன்
காங்கிரஸ் – கே.வேலு
மா.கம்யூ. கட்சி – எம்.தட்சிணாமூர்த்தி
த.வெ.க. – ஏ.கே.சாய் ஜெ.சரவணன் குமார்
நாம் தமிழர் கட்சி – க.ரஞ்சித்
5.முத்தியால்பேட்டை
என்.ஆர்.காங்கிரஸ் – வையாபுரி மணிகண்டன்
காங்கிரஸ் – ஈரம் ஜி.ராஜேந்திரன்
த.வெ.க. – ஜெ.பிரகாஷ்குமார்
நாம் தமிழர் கட்சி – பரிதாபேகம்
6.பாகூர்
என்.ஆர்.காங்கிரஸ் – தியாகராஜன்
தி.மு.க. – ஆர்.ஆர்.செந்தில்குமார்
பா.ம.க. – கருணாநிதி
த.வெ.க. – என்.தனவேலு
நாம் தமிழர் கட்சி – நவீனா சிவராஜ்
7.ராஜ்பவன்
பா.ஜ.க. – ராமலிங்கம்
தி.மு.க. – விக்னேஷ் கண்ணன்
காங்கிரஸ் -ஆர்.குமரன்
த.வெ.க. – வி.ஜெ.சந்திரன்
நாம் தமிழர் கட்சி – சி.கற்பகவல்லி
8.உப்பளம்
அ.தி.மு.க. – ஏ.அன்பழகன்
தி.மு.க. – வி.அனிபால் கென்னடி
த.வெ.க. – எஸ்.சிவா
நாம் தமிழர் கட்சி – வே.தேவி பிரியா
9. உழவர் கரை
என்.ஆர்.காங்கிரஸ் – நாராயணசாமி
காங்கிரஸ்- எம்.சிவசங்கர்
பா.ம.க. – மங்கையர்கரசி
த.வெ.க. – எஸ்.சசிபாலன்
நாம் தமிழர் கட்சி – சித்ரா செல்வம்
விடுதலை சிறுத்தைகள் கட்சி – செல்வ.புஷ்பலதா
இ. கம்யூ. கட்சி – என்.கலைநாதன்
அ.இ.பு.த.ம.மு.க. – எம்.லாவண்யா
10.அரியாங்குப்பம்
என்.ஆர்.காங்கிரஸ் – சி.ஐயப்பன்
காங்கிரஸ் – டி.விஜயலட்சுமி
பா.ம.க. – குணசேகரன்
த.வெ.க. – எஸ்.குமரவேலு
நாம் தமிழர் கட்சி – கா.சுந்தர வடிவேலு
11.மணவெளி
பா.ஜ.க. – ஏம்பலம்
காங்கிரஸ் – அனந்தராமன்
பா.ம.க. – ராஜாராம்
த.வெ.க. – பி.ராமு
நாம் தமிழர் கட்சி – ம.செ.இளங்கோவன்
12.வில்லியனூர்
என்.ஆர்.காங்கிரஸ் – ரவிக்குமார்
தி.மு.க. – இரா.சிவா
பா.ம.க. – கிருஷ்ணமூர்த்தி
த.வெ.க. – ஆர்.ரமேஷ்
நாம் தமிழர் கட்சி – த.ரமேஷ்
அ.இ.பு.த.ம.மு.க. – எம்.நந்தகோபால்
13.முதலியார்பேட்டை
பா.ஜ.க. – ஜான்குமார்
தி.மு.க. – லீ.சம்பத்
பா.ம.க. – கோபாலகிருஷ்ணன்
த.வெ.க. – என்.மணிபாலன்
நாம் தமிழர் கட்சி – மு.வேலவன்
14.மண்ணாடிப்பட்டு
பா.ஜ.க. – நமச்சிவாயம்
காங்கிரஸ் – டி.பி.ஆர்.செல்வம்
த.வெ.க. – கே.பாரதிதாசன்
நாம் தமிழர் கட்சி – ஓவியா பா.வெங்கடேசன்
15.உருளையன்பேட்டை
அ.தி.மு.க. – ஏ.காந்தி
தி.மு.க. – எஸ்.கோபால்
பா.ம.க. – ஏபேல் வெர்ஜினியா
நேயம் மக்கள் கழகம் – நேரு
நாம் தமிழர் கட்சி – அனிதா வீரப்பன்
16.மங்கலம்
என்.ஆர்.காங்கிரஸ் – ரங்கசாமி
தி.மு.க. – எஸ்.எஸ்.ரங்கன்
காங்கிரஸ் – கே.ரகுபதி
பா.ம.க. – மதியழகன்
த.வெ.க. – எம்.கே.சத்யா
நாம் தமிழர் கட்சி – மு.சுப்பிரமணி
17.காமராஜ் நகர்
லட்சிய ஜனநாயக கட்சி – ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்
காங்கிரஸ் – பி.கே.தேவதாஸ்
பா.ம.க. – ஹேமச்சந்திரன்
த.வெ.க. – டாக்டர் ஆர்.சுமன்
நாம் தமிழர் கட்சி – பா.கெளரி
18.நெல்லித்தோப்பு
லட்சிய ஜனநாயக கட்சி – ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்
தி.மு.க. – வே.கார்த்திகேயன்
காங்கிரஸ் – பாலன், ஆனந்த்பாபு
பா.ம.க. – ஜானகிராமன்
த.வெ.க. – எஸ்.விக்னேஷ்வரன்
நாம் தமிழர் கட்சி – மு.சிவக்குமார்
19.காலாப்பட்டு
பா.ஜ.க. – கல்யாணசுந்தரம்
தி.மு.க. – ஏ.செந்தில் என்ற ரமேஷ்
காங்கிரஸ் – ஷாஜகான்
பா.ம.க. – ஊத்துக்காட்டான்
த.வெ.க. – டி.சசிக்குமார்
நாம் தமிழர் கட்சி – க.காமராஜ்
20.இந்திராநகர்
என்.ஆர்.காங்கிரஸ் – ஆறுமுகம்
காங்கிரஸ் – என்.ராஜகுமார்
பா.ம.க. – வடிவேல்
த.வெ.க. – எஸ்.முருகன்
நாம் தமிழர் கட்சி – தி.தேவிகா
அ.இ.பு.த.ம.மு.க. – எஸ்.ஜெயபால் என்ற செங்கேணி
21.கதிர்காமம்
என்.ஆர்.காங்கிரஸ் – ரமேஷ்
தி.மு.க. – ஏ.பி.ஆர்.வடிவேலு
பா.ம.க. – ஆர்.சுப்ரமணியன்
த.வெ.க. – ஆர்.ஜெயந்தி
நாம் தமிழர் கட்சி – சுபஸ்ரீ தமிழ்ச்செல்வன்
22.ஊசுடு (தனி)
பா.ஜ.க. – தீப்பாய்ந்தான்
காங்கிரஸ் – பி.கார்த்திகேயன்
த.வெ.க. – எஸ்.சரகணபவா
நாம் தமிழர் கட்சி – கெளரி
விடுதலை சிறுத்தைகள் கட்சி – அரியபுத்ரி என்ற அரிமாத்தமிழன்
23.தட்டாஞ்சாவடி
என்.ஆர்.காங்கிரஸ் – ரங்கசாமி
காங்கிரஸ் – வி.வைத்திலிங்கம்
பா.ம.க. – கதிரேசன்
நேயம் மக்கள் கழகம் – விநாயகம்
நாம் தமிழர் கட்சி – ச.கார்த்திக் குமாரி
24.ஏம்பலம் (தனி)
என்.ஆர்.காங்கிரஸ் – இ.மோகன்தாஸ்
காங்கிரஸ் – எம்.கந்தசாமி
த.வெ.க. – வி.தமிழ்செல்வன்
நாம் தமிழர் கட்சி – எஸ்.மனோஜ் சந்தர்
25.நெடுங்காடு (தனி)
என்.ஆர்.காங்கிரஸ் – சந்திர பிரியங்கா
காங்கிரஸ் – தினேஷ்குமார்
த.வெ.க. – யு.காமராஜ்
நாம் தமிழர் கட்சி – அ.விக்னேஷ்
26.திருநள்ளாறு
பா.ஜ.க. – ராஜசேகரன்
காங்கிரஸ் – ஆர்.கமலக்கண்ணன்
த.வெ.க. – ஏ.ராஜா முகமது
நாம் தமிழர் கட்சி – சே.வினோத்
27.காரைக்கால் வடக்கு
என்.ஆர்.காங்கிரஸ் – திருமுருகன்
காங்கிரஸ் – ஏ.எம்.ரஞ்சித்
த.வெ.க. -ஏ.வெங்கடேஷ்
நாம் தமிழர் கட்சி – ச.அனுசியா
28.நிரவி – டி.ஆர்.பட்டினம்
பா.ஜ.க. – மீனாட்சி சுந்தரம்
தி.மு.க. – எம்.நாகதியாகராஜன்
த.வெ.க. – ஜி.கணேஷ்
நாம் தமிழர் கட்சி – மா.மாலா
29.மாகே
பா.ஜ.க. – தினேஷன்
காங்கிரஸ் – ரமேசன் பிரம்பாத்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – முகமது சமீல்
த.வெ.க. – எம்.பிரிஜேஷ்
30.ஏனாம்
என்.ஆர்.காங்கிரஸ் – மல்லாடி கிருஷ்ணாராவ்
காங்கிரஸ் – கோலப்பள்ளி சீனிவாஸ் அசோக்
த.வெ.க. – ஏ.தோட்டா ராஜு
