புதுச்சேரி சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு லட்சிய ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். அப்போது தன்னுடைய சொத்து மதிப்பை தாக்கல் செய்துள்ளார்.
புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் 2026
இந்த நிலையில், ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வேட்புமனுவின் படி, அவரிடம் கையிருப்பாக ரூ. 20.59 லட்சமும், அவரது மனைவி சிந்து ஸ்ரீசார்லஸிடம் ரூ. 1.82 லட்சமும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கார்களில் ரூ. 66.15 லட்சம் மதிப்புள்ள பென்ஸ் மற்றும் ரூ. 1.29 கோடியிலான டொயோட்டோ வெல்பயர் கார்கள் உள்ளன.மேலும், ஜோஸ் சார்லஸிடம் ரூ. 25.67 கோடி மதிப்பிலான தங்கம், ரூ. 44.87 கோடி மதிப்பிலான வைரங்கள், 134.98 கிலோ வெள்ளி ரூ. 3.77 கோடி மதிப்பில், ரூ. 38.53 கோடி மதிப்பிலான வாட்சுகள் மற்றும் ரூ. 1.57 லட்சம் மதிப்பிலான முத்துகள் உள்ளன. டிடிஎஸ் உரிமைகளின் படி ரூ. 1.95 கோடி உள்ளது. அவரது மனைவியிடம் ரூ. 5.35 கோடி மதிப்பிலான தங்கம், ரூ. 2.10 கோடி மதிப்பிலான வைரம், 60 கிலோ வெள்ளி ரூ. 1.68 கோடி மதிப்பில் மற்றும் ரூ. 1.14 கோடி மதிப்பிலான வாட்சுகள் உள்ளன. ஜோஸ் சார்லஸிடம் விவசாயம் அல்லாத நிலம் ரூ. 192 கோடி மதிப்பில் உள்ளது; அவரது மனைவியிடம் ரூ. 60 லட்சம் மதிப்பில் நிலங்கள் உள்ளன.
எந்த கூட்டணிக்கு செல்வாக்கு அதிகம்? களத்தில் முந்துவது யார்?
ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் சொத்து விவரம்
குடியிருப்பு கட்டடங்கள் ரூ. 269 கோடி மதிப்பில் உள்ளன; அவரது மனைவியிடம் ரூ. 60 லட்சம் மதிப்பில் கட்டடங்கள் உள்ளன. சொத்துகளில் ரூ. 19.45 கோடி கடனும்,கார் லோன் ரூ. 1.28 கோடியும், உள்ளூர் வங்கியில் கிரெடிட் கார்டு லோன் ரூ. 5.91 லட்சமும், வெளிநாட்டு வங்கியில் ரூ. 1.03 கோடியும் உள்ளன. கடந்த நிதியாண்டில் ஜோஸ் சார்லஸுக்கு ரூ. 59.37 கோடி வருமானம், அவரது மனைவிக்கு ரூ. 16.63 லட்சம் வருமானம் வந்துள்ளது.
அசையும் சொத்துகள் ஜோஸ் சார்லஸிடம் ரூ. 328 கோடியும், மனைவியிடம் ரூ. 10.61 கோடியும் உள்ளன. அவரிடம் சொந்தமாக வாங்கிய அசை சொத்துகள் ரூ. 102 கோடியும், பரம்பரையாக வந்தவை ரூ. 167 கோடியும் உள்ளன. அவரது மனைவியிடம் 60 லட்சம் மதிப்பில் அசை சொத்துகள் உள்ளன. கடன்கள் மொத்தம் ரூ. 210 கோடியும், வங்கிகளில் டெபாசிட்டுகள் ரூ. 200 கோடியும் உள்ளன; அவரது மனைவி பெயரில் ரூ. 3.43 லட்சம் டெபாசிட்டுகள் உள்ளன.
ஜோஸ் சார்லஸ் ரூ. 14.28 கோடி மதிப்பில் ஷேர்களில் முதலீடு செய்துள்ளார்; அவரது மனைவி ரூ. 3.6 லட்சம் மதிப்பில் ஷேர்களில் முதலீடு செய்துள்ளார். அவர்களுக்கு எடுத்த அட்வான்ச் தொகை ரூ. 195 கோடியும், அவரது மனைவிக்கு ரூ. 24.2 லட்சமாக உள்ளது.
வேட்புமனுவில் வழக்குகளுக்கான தகவலும் வெளியிடப்பட்டுள்ளது:
- சட்டவிரோத நிதிகளை பிணையற்ற கடன்கள் என காட்டி சொத்துகளை வாங்கியதாக அமலாக்க இயக்குநரகத்தால் தொடரப்பட்ட வழக்கு; இது எர்ணாக்குளம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
- பணமோசடி, சட்டவிரோத பணத்தை ஈட்டுதல் மற்றும் அசை சொத்துகளில் முதலீடு செய்தல் தொடர்பான வழக்கு டெல்லி மேல்முறையீடு தீர்ப்பாயத்தில் உள்ளது.
- மேற்கு வங்கியில் லாட்டரி சீட்டுகள் தொடர்பான 3 குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
