’பும்ரா சிறந்த பந்துவீச்சாளர்தான், ஆனால்’….நியூசிலாந்து வீரர் ஓபன் டாக்

சென்னை,

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியுடன் டி20 உலகக் கோப்பை தொடர் 2026 நிறைவடைகிறது. இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

இந்த முக்கியமான போட்டிக்கு முன் ஊடகங்களிடம் பேசிய நியூசிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் கிளென் பிலிப்ஸ், இந்திய அணியின் பந்துவீச்சை, குறிப்பாக பும்ரா குறித்து தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

அவர் பேசுகையில், “பும்ரா சிறந்த பந்துவீச்சாளர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவரும் மனிதர்தான். அனைவருக்கும் இருப்பதுபோல அவருக்கும் ஒரு மோசமான நாள் இருக்கலாம். அந்த நாள் இறுதிப்போட்டியாக இருக்குமென நாங்கள் நம்புகிறோம்,” என்று பிலிப்ஸ் கூறினார்.

Also Read
நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா ‘மாஸ்டர் பிளான்’…அணியில் மாற்றமா?
’பும்ரா சிறந்த பந்துவீச்சாளர்தான், ஆனால்’....நியூசிலாந்து வீரர் ஓபன் டாக்

மேலும், பும்ரா தவறுதலாக ஒரு லூஸ் பந்தை வீசினால் அதை பவுண்டரிக்குத் தள்ள தயாராக இருப்பதாகவும் தனது துல்லியமான பந்துவீச்சால் அழுத்தம் கொடுத்தால், அதற்கேற்ப தாங்கள் திட்டத்தையும் மைதானத்தில் மாற்றிக் கொள்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.

பும்ரா மட்டுமல்லாமல் இந்திய அணியின் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சையும் எதிர்கொள்வது முக்கியம் என பிலிப்ஸ் கூறினார்.

Source link