பெங்களூரு மால் சாம்ராஜ்யம்… ரூ.2,500 கோடியை தொடும் ஃபீனிக்ஸ் மால் ஆஃப் ஆசியா- ஐடி மக்களால் கொட்டும் காசு! – phoenix mall of asia bengaluru 2026 revenue growth projection with 2500 crore

கர்நாடகா மாநிலத் தலைநகர் பெங்களூருவில் மால்கள் பெரிதும் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்த சூழலில் நடப்பாண்டு வருமான எதிர்பார்ப்பு தொடர்பான கணக்கீட்டில் ஃபீனிக்ஸ் மால் ஆஃப் ஆசியா முதலிடம் பிடித்திருக்கிறது.

Bengaluru Phoenix Mall of Asia Revenue Projection 2026
ஐடி கம்பெனிகளும், குவிந்து கிடக்கும் வேலைவாய்ப்புகளும் என்று சொன்னாலே பலருக்கும் பெங்களூரு சிட்டி தான் நினைவிற்கு வரும். அந்த அளவிற்கு உள்ளூர் முதல் சர்வதேசம் வரை ஏராளமான நிறுவனங்கள் வரிசை கட்டி தடம் பதித்துள்ளன. மேலும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் தலைநகரம் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது. இதன் காரணமாக இங்கு குடியேறும் மக்களின் வசதிக்காக பொழுதுபோக்கு அம்சங்களில் அதிக முதலீடுகள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக மால்களை சொல்லலாம்.

இந்தியாவின் டாப் மால்களின் வருவாய் இலக்கு 2026
இந்தியாவின் டாப் மால்களின் வருவாய் இலக்கு 2026

இந்நகரின் ஒவ்வொரு பகுதியிலும் மால்கள் இடம்பெறும் அளவிற்கு பெரு நிறுவனங்கள் திட்டங்கள் வகுத்து வருகின்றன. சமீபத்தில் இந்தியாவில் உள்ள டாப் மால்களின் 2026 விற்பனை மற்றும் வருமானம் தொடர்பான ஆய்வு முடிவுகள் வெளியாகின அதில் முதலிடத்தில் ஃபீனிக்ஸ் மால் ஆஃப் ஆசியா ரூ.2,500 கோடி உடன் முதலிடம் பிடித்துள்ளது.

4வது இடத்தில் யுபி சிட்டி மால் ரூ.1,200 கோடி உடன் காணப்படுகிறது. இதுமட்டும் உண்மையாக இருந்தால் பெங்களூரு மால்கள் புதிய சாதனையை படைத்துவிடும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஃபீனிக்ஸ் மால் ஆஃப் ஆசியாவின் பிரம்மாண்டம்
ஃபீனிக்ஸ் மால் ஆஃப் ஆசியாவின் பிரம்மாண்டம்

2026ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் ஃபீனிக்ஸ் மால் ஆஃப் ஆசியா 730 கோடி ரூபாய்க்கும் மேல் வர்த்தகம் செய்திருக்கிறது. நடப்பாண்டின் இரண்டாம் பாதியில் ஏராளமான பண்டிகைகள் வரவுள்ளன. அதை வைத்து கணக்கிட்டால் 2,500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் ஈட்டிவிடும் என்கின்றனர்.

இது கடந்த ஆண்டை காட்டிலும் 110 சதவீதம் அதிகம் என்பது கவனிக்கத்தக்கது. இது ஹெப்பல் பகுதியில் அமைந்துள்ளது. கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிட்டிக்குள் வரும் போது ஹெப்பல் மேம்பாலத்திற்கு முன்பாக இடதுபுறம் மிகவும் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது.

யுபி சிட்டி மாலுக்கு கிடைத்த வரவேற்பு
யுபி சிட்டி மாலுக்கு கிடைத்த வரவேற்பு

ஜிகேவிகே வளாகத்திற்கு அருகிலும், கொலம்பியா ஏசியா ஹாஸ்பிடலுக்கு எதிரிலும் இடம்பெற்றுள்ளது. யுபி சிட்டி மாலை பொறுத்தவரை பெங்களூரு நகரின் மேல் தட்டு மக்களை பெரிதும் கவரக்கூடிய அம்சங்கள் அதிகம் இருப்பதாக கூறுகின்றனர். பொதுவாக மால்களில் கூட்டம் அதிகமாக அலைமோதினாலும் பொருட்களை வாங்கி செல்வோர் எண்ணிக்கை குறைவு தான். ஏனெனில் சொகுசு பிராண்ட்கள் தான் அதிகமாக இருக்கும்.

ஐடி ஊழியர்களுக்கு மால்கள் மீது மோகம்
ஐடி ஊழியர்களுக்கு மால்கள் மீது மோகம்

இருப்பினும் யுபி சிட்டியில் வர்த்தகம் நல்ல முறையில் ஏற்றத்தை நோக்கி செல்வதாக சுட்டிக் காட்டுகின்றனர். இங்கு கலை நுணுக்கங்கள் உடன் அமைக்கப்பட்டுள்ள விஷயங்கள் பலரையும் கவரும் வகையில் அமைந்துள்ளன. இது 1,200 கோடி ரூபாயை தாண்டி நடப்பாண்டு வர்த்தகம் செய்யும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மால்களின் மீதான மோகம் திடீரென அதிகரித்துள்ளதற்கு Revenge Shopping என்ற விஷயத்தை சுட்டிக் காட்டுகின்றனர்.

பெங்களூருவில் Revenge Shopping கலாச்சாரம்
பெங்களூருவில் Revenge Shopping கலாச்சாரம்

இந்த கலாச்சாரம் பெங்களூரு நகரில் அதிகரித்து வருகிறது. அதாவது, கொரோனா, ஒர்க் ஃப்ரம் ஹோம் போன்ற விஷயங்களால் முடங்கி போயிருந்த மக்கள் அதிக அளவில் ஷாப்பிங் முடியாமல் தவித்தனர். தற்போது ஒர்க் ஃப்ரம் ஆபிஸ் என பெரும்பாலான நிறுவனங்கள் மாறிவிட்டன.

இதனால் முடங்கி கிடந்த மக்கள் வெளியே வரும் போது, தங்களது ஷாப்பிங் ஆசையை பூர்த்தி செய்ய வழக்கத்தை விட அதிகமாக செலவு செய்வர். இதைத் தான் ரிவெஞ்ச் ஷாப்பிங் என்கின்றனர். இந்த விஷயம் பெங்களூரு மால்களுக்கு ஜாக்பாட் அடித்தது போல் ஆகிவிட்டது.