பெங்களூரு,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்களான கர்நாடகாவைச் சேர்ந்த ராகுல் டிராவிட், அனில் கும்பிளே ஆகியோரது பெயர்கள் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் உள்ள கேலரியின் ஒரு பகுதிக்கு சூட்டப்பட்டுள்ளது. அந்த பெயர் பலகை நேற்று திறக்கப்பட்டது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டிக்கு முன்னதாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் வீரர்களுடன், அவர்களது குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.
