பெண்கள் ஆசிய கோப்பை கால்பந்து: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஜப்பான் அணி சாம்பியன்

சிட்னி,

21-வது பெண்கள் ஆசிய கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா வில் கடந்த 1-ந் தேதி தொடங்கியது. 12 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் கோப்பை யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் சிட்னியில் நேற்று நடந்தது.

தொடக்கம் முதலே பரபரப்பாக நகர்ந்த இந்த ஆட்டத்தில் ஜப்பான் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தன்வசப்படுத்தியது.

முன்னாள் உலக சாம்பியனும், ஆசிய கண்டத்தில் தரவரிசையில் முதலி டம் வகிக்கும் அணியான ஜப்பான் 3-வது முறையாக ஆசிய கோப் பையை வென்றுள்ளது. ஏற்கனவே 2014, 2018-ம் ஆண்டுகளிலும் கோப் பையை கைப்பற்றி இருந்தது.

Source link