ஐதராபாத்,
பெண்கள் உலகக் கோப்பை ஆக்கி போட்டிக் கான தகுதி சுற்று ஐதராபாத்தில் நடந்து வரு கிறது. இதில் பங்கேற்ற 8 அணிகள் இரு பிரி வாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதின. ‘பி’ பிரிவில் இடம் பெற்ற இந்தியா தனது 3-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று வேல்ஸ் அணியை எதிர்கொண்டது.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது. இதன் மூலம் இந்தியா தனது பிரிவில் முதலி டத்தை (2 வெற்றி. ஒரு டிராவுடன் 7 புள்ளி) பிடித்து அரையிறுதிக்கு முன் னேறியது. நாளை நடக்கும் அரையிறுதியில் இந்திய அணி, இத்தாலியை சந்திக்கிறது.
