பெண்ணாகரம் தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்கிய திமுக.. மீண்டும் சிட்டிங் எம்எல்ஏ .தமிழ்குமரனுக்கு வாய்ப்பா ? – pennagaram constituency will the sitting mla tamilkumar get another opportunity

பாமக முன்னால் தலைவர் ஜிகே மணியின் மகனும் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவருமான ஜி.கே.எம். தமிழ்குமரன் காங்கிரஸ் கட்சிகள் இணைந்துள்ளார்.

ஜிகே.எம் தமிழ்குமரன்(புகைப்படங்கள்Samayam Tamil)
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு பெண்ணாகரம் தொகுதியில் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில், தற்போது சிட்டிங் எம்எல்ஏவாக இருக்கும் தமிழ் குமரன் மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.பாமக கட்சி தொடங்கியதிலிருந்து ராமதாஸுக்கு வலதுகரமாக செயல்பட்டு வருபவர் ஜி கே மணி.

பாமகவில் உட்கட்சி பூசல்

கடந்த ஓராண்டுகளுக்கு மேலாக பாமகவில் உட்கட்சி பூசல் காரணமாக அன்புமணிக்கும் ராமதாசுக்கும் மோதல் வெடித்தது. இதில் பாமக பிளவுப்பட்டது. அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சி பிளவுக்கு பின்னணியில் ஜி.கே. மணி இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் ராமதாஸுக்கு ஆதரவாக தற்போது வரை ஜிகே மணி ஓர் அங்கமாக இருந்து வருகிறார்.மேலும் வரும் சட்டமன்ற தேர்தலுக்காக ராமதாஸ் கூட்டணி அறிவிப்பதில் இழுபறி நீடித்து வந்தது.

நெருக்கடியில் திமுக! கூட்டணி என்னாகும்?

ராமதாஸ் – சசிகலா தலைமையில் புதிய கூட்டணி

இந்த நிலையில் சசிகலா தலைமையில் புதிய கூட்டணி அமைத்து 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது. பாமக ராமதாஸ் அணியில் இளைஞரணி தலைவராக செயல்பட்டு வந்த தமிழ்குமரன் தற்பொழுது காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அன்புமணி வகித்து வந்த இளைஞரணி தலைவர் பதவிக்கு தமிழ் குமரன் நியமிக்கப்பட்டார்.

இளைஞரணி தலைவர் பதவியில் இருந்து விலகிய தமிழ்குமரன்

ஆனால் சில மாதங்களிலேயே அவர் அந்த பதவியில் இருந்து விலகினார். இது குறித்து பாமக நிறுவனர் ராமதாசுக்கு எழுதிய கடிதத்தில் தனிப்பட்ட காரணங்களால் பதவியை விட்டு விலகுவதாக தெரிவித்து இருந்தார். அதன் பிறகு அந்த பதவிக்கு முகுந்தன் நியமிக்கப்பட்டார். ஆனால் குடும்பத்திற்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக முகுந்தன் அந்த பதவியில் இருந்து விலகினார். இதனையடுத்து, கட்சியில் பல மாற்றங்கள் நடந்தது. அதாவது பாமக தலைவர் பதவியை அன்புமணியிடமிருந்து ராமதாஸ் பறித்தார்.

மீண்டும் ராமதாஸ் எடுத்த அதிரடி முடிவு

பின்னர் அவருக்கு செயல் செயல் தலைவர் பதவி வழங்குவதாக அறிவித்த நிலையில் அதற்கு அன்புமணி ஒப்புக்கொள்ளவில்லை. பின்னர் அந்த பதவியை தன்னுடைய மூத்த மகள் காந்திமதிக்கு வழங்கினார். இதனைத் தொடர்ந்து ராமதாசுக்கும் அன்புமணிக்கும் இடையே உச்சகட்ட மோதல் ஏற்பட்டதன் காரணமாக கட்சியிலிருந்து நீக்கினார்.இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மீண்டும் தமிழ் குமரனுக்கு இளைஞர் அணி பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த சூழலில் காங்கிரஸில் இணைந்திருப்பது அரசியல் ரீதியாக முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. மேலும், இது ராமதாஸ் தரப்பு பாமகவினருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸில் இணைந்த தமிழ்குமரன்

இந்த நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தொகுதி மற்றும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த வகையில், காங்கிரஸ் கட்சிக்கு பெண்ணாகரம் தொகுதியை திமுக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் தற்போது செட்டிங் எம்எல்ஏவாக இருக்கும் தமிழ் குமரன் மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.