சென்னையில் நேற்றைய பரப்புரையில் விதிகளை மீறியதாக விஜய் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல்
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சென்னை பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதன் முறையாக வேட்பு மனு தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து கட்சி தேர்தல் பணிமனை அருகே உள்ள பகுதியில் விஜய் பரப்புரையில் ஈடுபட்டார் அப்போது பேசிய அவர் சட்டம் ஒழுங்கு சரி இல்லாத நிலையில் உள்ள தமிழ்நாட்டை நாம் காப்பாற்ற வேண்டும். தற்போது முதலமைச்சராக உள்ள மு க ஸ்டாலினுக்கு மக்கள் அனைவரும் முக்கியம் கிடையாது என குற்றம் சாட்டினர். மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பெரம்பூரில் தவெக விஜய் வேட்பு மனு தாக்கல்
விஜயின் பிரச்சார வாகனம் சென்றபோது பெரம்பூர் மூலக்கடை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதே நேரத்தில் பெரம்பூரில் வேட்பு மனு தாக்கல் முடிந்து கொளத்தூர் தொகுதிக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வந்தபோது அங்கு அதிகமாக மக்கள் திரண்டதால் போக்குவரத்து மேலும் பாதிக்கப்பட்டது, இதனால் அவரது வாகனம் மெதுவாக நகர வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் அகரம் பகுதியில் விஜய் பேசியபோது தமிழக வெற்றிக்கழக கொளத்தூர் தொகுதி வேட்பாளரின் பெயரை தவறாக கூறியதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
முதல்ல உடைக்கபோறது திமுகவோட கோட்டையை தான்- விஜய் போடும் மாஸ்டர் பிளான்
வில்லிவாக்க பரப்புரை ரத்து
இதனைத் தொடர்ந்து போலீசார் சில நிமிடங்களில் பரப்புரையை முடிக்க காவல்துறையினர் அறிவுறுத்திஉள்ளனர். இந்த சூழலில், அடுத்ததாக வில்லிவாக்கத்தில் நடைபெற இருந்த தெருமுனை கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள பதிவில்:பொதுமக்கள் தன்னிச்சையாக அதிக அளவில் திரண்ட நிலையில் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குகளை காவல்துறை சரிவர செய்யாததால் பாதுகாப்பு காரணமாக கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
விஜய் மீது வழக்கு பதிவு
இதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கப்பட்ட புகாரில் விஜய் பங்கேற்கும் கூட்டங்களுக்கு போதிய பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த சென்னை காவல் ஆணையர் அருணுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இதற்கிடையே தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறிய குற்றச்சாட்டில் விஜய் உள்ளிட்ட சுமார் 500 பேருக்கு எதிராக பெரவலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரச்சாரத்தின் போது பொதுமக்கள் இடையூறு
கொளத்தூரில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது பொதுமக்கள் இடையூறு விளைவித்ததுடன் அனுமதிக்கப்பட்ட ஐந்து ஒலிபெருக்கிகளுக்கு பதிலாக முப்பது மொழி பெருக்கிகள் பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது தேர்தல் சிறப்பு கண்காணிப்பு பிரிவு அதிகாரி குமார் அடுத்த புகாரியின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு சம்பவத்துக்கான வீடியோ ஆதாரங்களும் விதைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
