தவெக தலைவரும் நடிகருமான விஜய், வருகிற சட்டமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் விஜய் போட்டியிட உள்ளார். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சரியாக 10 நாட்களே உள்ள நிலையில், அனல் பறக்க தேர்தல் பிரசாரத்தில் விஜய் ஈடுபட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து வரும் விஜய், தான் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் மீண்டும் ஒருமுறை பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளார். வேட்பு மனு தாக்கல் செய்த கடந்த 30 ஆம் தேதி ஏற்கனவே ஒரு முறை பெரம்பூர் தொகுதியில் விஜய் பிரசாரம் செய்தார்.
இந்த நிலையில்தான், வரும் 20 ஆம் தேதி பெரம்பூர் மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க உள்ளார். அன்றைய தினம், சென்னையில் மேலும் சில தொகுதிகளிலும் பிரசாரம் செய்ய விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
