பெரம்பூர் தொகுதியில் விஜய் வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்பு? காரணம் இதுதான்! – tvk vijay nomination papers for the perambur constituency are likely to be rejected

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அது நிராகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிவிட்டது இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

tvk vijay(புகைப்படங்கள்Samayam Tamil)
தமிழ்நாட்டில் மொத்தம் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெற உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026

ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள திமுகவுடம், இழந்த ஆட்சியை பிடிக்க அதிமுகவும் போட்டி போட்டுக்கொண்டு மக்களை கவரும் வகையில் வாக்குறுதிகளை அளிப்பது,பொதும்மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரிப்பது போன்ற அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு தேர்தல் பணிகளில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் காய் நகர்த்தி வருகிறார்.

விஜய் பெரம்பூர் தொகுதி வேட்புமனு

அந்த வகையில் தவெகவில், கூட்டணி அமைத்தால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற அறிவிப்பை முன் வைத்தார். கூட்டணி வைக்க எந்த ஒரு கட்சிகளும் முன்வராததால் முதன்முறையாக எதிர்கொள்ளும் சட்டம் என்ற தேர்தலில் விஜய் தனித்து களமிறங்க உள்ளார்.இந்த நிலையில், 234 தொகுதிகளுக்கான தமிழக வெற்றி கழக வேட்பாளரை கடந்த 29ஆம் தேதி விஜய் அறிவித்தார். அதில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பாளராக விஜய் போட்டியிட உள்ளார்.

திமுக கூட்டணியில் என்ன நடக்கிறது? ஏன் இப்படி பேசுகிறார்கள்?

பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகள்

இந்த இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத் தாக்கலை விஜய் சமர்ப்பித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தன்னுடைய அரசியல் பிரச்சாரத்தை விஜய் தொடங்கினார். ஆனால்,இந்த நிலையில்,பெரம்பூரில் விஜய் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.குறிப்பாக விஜய் சமர்ப்பித்துள்ள வேட்புமனுவில் குளறுபடி இருப்பதாக கூறப்படுகிறது.

வேட்பாளர் பிரமாணப் பத்திர முரண்பாடு

தேர்தல் விதிகளின்படி, ஒரு வேட்பாளர் தனது பிரம்மாண்ட பத்திரத்தில் உண்மையை மறைப்பது அல்லது தவறான தகவல்களை அளிப்பது கடுமையான குற்றமாகும். இந்த செயலுக்கு சட்டப்படி தண்டனை விதிக்கப்படுவதோடு அவரின் வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது. தற்பொழுது விஜய் ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். பெரம்பூர் தொகுதியில் சமர்ப்பித்தல் வேட்பு மனுவின் தன் மீது எந்த வழக்கும் இல்லை என குறிப்பிட்டு இருந்தார்.

தவெக விஜய் வேட்புமனு நிராகரிப்பு வாய்ப்பு

அதே நேரத்தில் திருச்சி கிழக்கு தொகுதியில் சமர்ப்பித்த வேட்புமனுவில் 2025 இல் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கு நிலுவையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு ஒரே வேட்பாளரின் வேட்புமனுகளில் முரண்பட்ட தகவல்கள் இருப்பதால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்படும் வாய்ப்பு அதிகமாக காணப்படுகிறது. ஆனால் வேட்புமனு தாக்கல் செய்யும் கால அவகாசம் ஏப்ரல் ஆறாம் தேதி இன்னும் முடிவடையவில்லை. இதனால் விஜய் திருத்தப்பட்ட புதிய பிரமாண பத்திரத்தை சமர்ப்பிப்பதன் மூலம் வேட்பு மனு நிராகரிப்பதில் இருந்து தப்பிக்க முடியும்.
சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களின் வேட்புமனு பரிசிலனை ஏப்ரல் 7ஆம் தேதி நடைபெறும் அந்த நாளில் விஜய் வேட்புமனு ஏற்கப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா என்பதற்கான இறுதி முடிவு அறிவிக்கப்படும். இந்த சூழலில் தேர்தல் சட்ட திட்டங்கள் கடுமையாகவும், வேட்பாளர் கடமையையும் மீறாமல் செயல்படுவது மூலம் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகிறது.