பெருமைக்குரிய தருணம்: அரசு தலைமை பதவியில் நீண்ட காலம் சேவையாற்றும் பிரதமர் மோடிக்கு ஜே.பி. நட்டா புகழாரம்

புதுடெல்லி

பிரதமர் மோடி மக்களவை தேர்தலில் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். மத்தியில் அவருடைய தலைமையில் மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அதனுடன், குஜராத் முதல்-மந்திரி மற்றும் பிரதமர் என மொத்தம் 8,931 நாட்கள் தலைமை பதவியை வகித்து, சிக்கிம் முன்னாள் முதல்-மந்திரி பவன் குமார் சாம்லிங்கின் (8,930) சாதனையை முறியடித்து உள்ளார். 24 ஆண்டுகள் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் ஈடுபாட்டுடன் பணியாற்றி வரும் அவருக்கு பல்வேறு தலைவர்களும் புகழாரம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பா.ஜ.க.வின் முன்னாள் தலைவரான ஜே.பி. நட்டா அவரை புகழ்ந்து பேசியுள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்ட செய்தியில், முன்னாள் முதல்-மந்திரி சாம்லிங்கின் சாதனையை பிரதமர் மோடி முறியடித்து இருக்கிறார். அரசு தலைமை பதவியில் நீண்ட காலம் சேவையாற்றி வருகிறார்.

Also Read
உலக பயங்கரவாத குறியீட்டில் முதல் இடம் பிடித்த பாகிஸ்தான்

பெருமைக்குரிய தருணம்:  அரசு தலைமை பதவியில் நீண்ட காலம் சேவையாற்றும் பிரதமர் மோடிக்கு ஜே.பி. நட்டா புகழாரம்

குஜராத் முதல்-மந்திரியாக பொதுமக்களுக்கு சேவையாற்றி, தன்னுடைய உறுதியான முடிவெடுத்தல், தலைமைத்துவம் மற்றும் திறமையால், ஒரு பிரதமராக நாட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளார். நாம் அனைவருக்கும் ஓர் உந்துதலாக இது அமையும். பொதுசேவைக்கான அவருடைய ஒவ்வொரு தருணமும் அன்னை இந்தியாவின் மீது கொண்ட ஆழ்ந்த பக்தியையும், ஈடுஇணையற்ற உள்ளார்ந்த செயல்பாட்டிற்கான சேவை மற்றும் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது என கூறியுள்ளார்.

Source link