கன்னட திரையுலகில் பிரபல நடிகர் மற்றும் இயக்குனராக ரக்சித் ஷெட்டி உள்ளார். இவர் 777 சார்லி, கிரிக் பார்ட்டி, சப்த சாகரடாச்சே எல்லோ, உலிதவரு கண்டந்தே உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் இயக்கி நடித்த ‘பேச்சிலர் பார்ட்டி’ என்ற திரைப்படம் கடந்த 2024-ம் ஆண்டு வெளியானது. அந்த திரைப்படத்தில் ‘ஒம்மே நின்னனு’ என்று தொடங்கும் பாடலில் பழைய பாடலின் பின்னணி இசையை பயன்படுத்தி இருந்தார்கள். இந்த படத்தை தயாரித்து வெளியிட்ட தும் ரக்சித் ஷெட்டி தான்.
இதையடுத்து அந்த பின்னணி இசைகொண்ட உண்மையான பாடலின் காப்புரிமையை பெற்றிருக்கும் எம்.ஆர்.டி. மியூசிக் நிறுவனம் டெல்லி ஐகோர்ட்டில் ரக்சித் ஷெட்டி மற்றும் படக்குழு மீது வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு நேரில் ஆஜராக ரக்சித் ஷெட்டிக்கு உத்தரவிட்டு இருந்தது. ஆனால் அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனால் கோர்ட்டு அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்தது.
அதையடுத்து ரக்சித் ஷெட்டி கோர்ட்டில் உடனே ஆஜரானார். அதையடுத்து விசாரணை துரிதகதியில் நடந்து நேற்று முன்தினம் தீர்ப்பு கூறப்பட்டது. அதில் உரிய அனுமதி பெறாமல் அந்த பாடலை பயன்படுத்தியதற்காக ரக்சித் ஷெட்டிக்கு ரூ.5 லட்சம் அபராதமும், அந்த பணத்தை அவர் நேரடியாக எம்.ஆர்.டி. மியூசிக் நிறுவனத்துக்கு நஷ்ட ஈடாக வழங்கவும் கூறி உத்தரவிட்டது.
