பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்தது: மத்தியஸ்தத்தில் தொடர்ந்து ஈடுபடுவோம் – பாகிஸ்தான் மந்திரி

பாகிஸ்தான் துணை பிரதமரும் வெளியுறவுத்துறை மந்திரியுமான இஷாக் தார் கூறியதாவது:

நானும் ராணுவத் தளபதி ஆசிப் முனீரும் இணைந்து, அமெரிக்கா–ஈரான் இடையே நடைபெற்ற பல சுற்று தீவிரமான மற்றும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியஸ்தம் செய்ய உதவினோம்.

இரு தரப்பினரும் போர் நிறுத்தத்திற்கான தங்களின் உறுதிப்பாட்டை தொடர்ந்து கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தத்தை இரு தரப்பும் மதிக்க வேண்டும்.

வரும் நாட்களிலும் அமெரிக்கா–ஈரான் இடையேயான பேச்சுவார்த்தைகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிக்கும். போர் நிறுத்தத்தை நிலைநிறுத்துவதில் பாகிஸ்தான் தொடர்ந்து ஈடுபடும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source link