போடியில் DMK பலம் அதிகரிப்பு…திமுகவில் இணைந்த அதிமுக முக்கிய நிர்வாகி -வேகமெடுக்கும் OPS பிரச்சாரம்! – aiadmk functionaries join dmk in the presence of o. panneerselvam in bodinayakanur

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் அரசியல் சூழ்நிலை தினந்தோறும் பரபரப்பாக மாறி வருகிறது. குறிப்பாக போடி சட்டமன்ற தொகுதியில் அரசியல் மாற்றங்கள் வேகமெடுத்து வருகின்றன. முன்னாள் முதல்வரும் தற்போது தி.மு.க. சார்பில் போட்டியிடும் ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஓபிஎஸ் பிரச்சாரம் தீவிரம்

தி.மு.க.வில் இணைந்த பிறகு முதல் முறையாக தேர்தலில் களம் இறங்கியுள்ள பன்னீர் செல்வம், தனது ஆதரவை வலுப்படுத்தும் வகையில் தொகுதி முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கிராமம் முதல் நகர்ப்புறம் வரை அனைத்து வாக்காளர்களையும் நேரடியாக சந்தித்து ஆதரவு கோரி வருகிறார். மேலும் பல்வேறு சமூக தலைவர்களையும் சந்தித்து அரசியல் ஆதரவை உறுதி செய்யும் முயற்சியும் மேற்கொண்டு வருகிறார்.

திமுக கூட்டணி ஜெயித்தாலும்…திமுகக்கு ஆட்சிக்கு வராது! BJP Kalyanaraman interview

இந்த சூழலில், அ.தி.மு.க.வில் இருந்து முக்கிய நிர்வாகிகள் ஒரே நேரத்தில் விலகி தி.மு.க.வில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. மார்க்கையன்கோட்டை பேரூராட்சியை சேர்ந்த முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் செயலாளர் அகிலன் தலைமையில் பல நிர்வாகிகள் தங்களது ஆதரவை மாற்றியுள்ளனர். குறிப்பாக பேரூராட்சியில் உள்ள 12 வார்டுகளில் 8 வார்டுகளின் கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கூட்டாக அ.தி.மு.க.வை விட்டு விலகி தி.மு.க.வில் இணைந்துள்ளனர்.

பேரூர் அவைத்தலைவர் ராஜேந்திரன், துணை செயலாளர் வேட்டைகருப்பதேவன், இணை செயலாளர் முருகன், அம்மா பேரவை செயலாளர் சுருளி சாமி, கணேசன், ரமேஷ், பிச்சைமணி, பாண்டி, சன்னாசி, பேரூர் அ.தி.மு.க., எம்.ஜி.ஆர். மன்ற செயலர் பெரியசாமி, துணை செயலர் ஆனந்தன், சோலைராஜன், தங்கபாண்டி உள்ளிட்டோரும் இணைந்தனர்.

அதிமுக நிர்வாகிகள் திமுக இணைப்பு

இந்த இணைப்பு நிகழ்ச்சி தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் பன்னீர் செல்வமும் கலந்து கொண்டு புதியவர்களை வரவேற்றார்.அப்போது பேசிய தமிழக முதல்வராக இரண்டாம் முறையாக மு.க.ஸ்டாலினை கொண்டு வர வேண்டும் என்பதுதான் நமது ஒரே இலக்கு. அதற்கு தகுந்தவாறு உழைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் அறிவுறை வழங்கினார்.இது போடி தொகுதியில் தி.மு.க.வின் அமைப்பு வலுவை மேலும் அதிகரிக்கும் என்று கட்சி வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

ஏற்கனவே பன்னீர் செல்வம் தி.மு.க.வில் இணைந்தது பெரிய அரசியல் மாற்றமாக கருதப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் இடையே கட்சி மாறுதல் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இது வாக்காளர்களிடையே குழப்பத்தையும், அதே நேரத்தில் தேர்தல் போட்டியை அதிகரிக்கும் சூழலையும் உருவாக்கியுள்ளது.

போடியில் DMK பலம் அதிகரிப்பு

அரசியல் நிபுணர்கள் பார்வையில், இந்த மாதிரியான கூட்டுச் சேர்க்கைகள் தேர்தல் முடிவில் முக்கிய பங்கு வகிக்கக்கூடும். குறிப்பாக உள்ளூராட்சி நிர்வாகிகள் மற்றும் வார்டு அளவிலான அமைப்பு தலைவர்கள் கட்சி மாறுவது, தரை மட்ட வாக்காளர்களின் மனநிலையை பாதிக்கும் வாய்ப்பு அதிகம் என கருதப்படுகிறது.

இதனால் போடி தொகுதியில் போட்டி கடுமையாகும் நிலையில், பன்னீர் செல்வத்தின் பலம் மேலும் உயர்ந்துள்ளதாக மதிப்பிடப்படுகிறது. அடுத்தடுத்த நாட்களில் மேலும் யார் யார் கட்சி மாறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் அதிகரித்துள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த மாற்றங்கள் இறுதி முடிவில் எவ்வாறு பிரதிபலிக்கும் என்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Source link