ரோம்,
ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேலிய போர் தொடரும் நிலையில், பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்ஸெத், பென்டகனில் நடந்த ஒரு கிறிஸ்தவ வழிபாட்டு கூட்டத்தில், போரில் நாங்கள் வெற்றி பெற்று எதிரிகளை வீழ்த்த வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார். மேலும் அனைவரும் தங்கள் வீடுகளிலும், பள்ளிகளிலும், தேவாலயங்களிலும் முழங்காலிட்டு இயேசுவின் பெயரால் பிரார்த்திக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
போப் லியோ 14வது கத்தோலிக்க திருச்சபையின் வரலாற்றில் அமெரிக்காவில் பிறந்த முதல் போப்பாண்டவர் ஆவார். தனது சொந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் மத ரீதியாக போரை நியாயப்படுத்தியதை அவர் கடுமையாக எதிர்த்தார்.
ஈரான் போரில் வெற்றிபெற அமெரிக்க மக்கள் தினமும் இயேசுவிடம் பிரார்த்திக்க வேண்டும் என வலியுறுத்திய அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஹெக்ஸெத்துக்கு போப் லியோ கடும் கண்டனம் தெரிவித்தார்.
போரை வெளிப்படையாக மதரீதியாக இணைப்பது, இயேசுவின் வழிக்கு முரணானது. பிறரை ஆதிக்கம் செலுத்தும் ஆசையை விடுத்து, பிறருக்கு எப்படி வாழ்வளிப்பது என்ற நோக்கமே இயேசுவின் வழி எனவும் கருத்து தெரிவித்தார் போப்.
