போர்சூழலில் தவித்து வந்த மீனவர்களை மீட்ட மத்திய அரசு – நன்றி தெரிவித்த எச்.ராஜா

சென்னை,

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

ஈரான், பஹ்ரைன் போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் மீன்பிடித் தொழிலுக்காக சென்று, தற்போதைய போர்சூழலில் தவித்து வந்த 327 இந்திய தமிழ் மீனவர்கள் உட்பட 345 இதர இந்திய மீனவர்களை நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மீட்டு தமிழகம் கொண்டுவந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

கொரோனா, ரஷ்யா-உக்ரைன் போர், ஈரான்-இஸ்ரேல் போர் என எந்தவொரு பேரிடர் வந்தாலும் இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரையும் பத்திரமாக மீட்டு என்றும் காத்து வரும் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், அதற்கு என்றும் உறுதுணையாக திகழும் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கும் எத்தனை நன்றிகள் கூறினாலும் தகும்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link