சேலம்,
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று சேலத்தில் நடந்த திமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது,
ஒரு கிராமத்தில் 2 ஆயிரத்து 500 பேருக்கு மாதம் தலா ரூ. 1,000 குடும்பத்தலைவிகளின் வங்கி கணக்குகளுக்கு செல்கிறபோது அந்த மாதத்தில் கிடைக்கக்கூடிய கிட்டத்தட்ட ரூ. 25 லட்சம் கிராமத்தில் சுழற்சியடைகிறது.
மளிகை கடையில், டீக்கடையில், ஜவுளிக்கடையில் , இறைச்சிக்கடையில் பணம் இல்லை என்ற நிலையை மாற்றி ஒவ்வொரு கிராமத்திலும் லட்சக்கணக்கில் பணம் புழங்குகிறது.
கிராமங்களில் லட்சக்கணக்கில் பணம் புழங்குவதற்கு அடிப்படை காரணம் தமிழ்நாடு முதல்-அமைச்சர் வழங்கும் ரூ. 1,000 குடும்பத்தலைவிகளுக்கான மகளிர் உரிமைத்தொகை.
ஆயிரம் மோடிக்கள் வந்தாலும், ஆயிரம் அமித்ஷாக்கள் வந்தாலும், ஓராயிரம் எடப்பாடிக்கள் வந்தாலும் ஓமலூரில் உதயசூரியன் சின்னத்தை யாராலும் தடுக்க முடியாது. அது வெற்றிக்கோட்டை.
என்றார்.
