வெல்லிங்டன்,
தென் ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.
இதையடுத்து நடைபெற்ற இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றிபெற்றது.
இந்நிலையில், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது.
நியூசிலாந்தின் வெல்லிங்டனில் நடைபெறும் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
