மகளிர் டி20: இந்தியா – ஆஸ்திரேலியா இன்று மோதல்

சிட்னி,

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மூன்று டி20, 3 ஒருநாள் மற்றும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் மோதும் முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று நடக்கிறது.

இவ்விரு அணிகளும் இதுவரை சர்வதேச டி20 போட்டியில் 35 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 26-ல் ஆஸ்திரேலியாவும், 8-ல் இந்தியா வும் வெற்றி பெற்றுள்ளன.

இந்திய நேரப்படி பிற்பகல் 1.45 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Source link