சென்னை,
’மகளிர் பிரீமியர் லீக் 2026’ தொடரின் எலிமினேட்டரில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி வருகிற 5-ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் பெங்களூரு அணியை எதிர்கொள்ளும்.
தொடர்ச்சியான வெற்றிகளுடன் குஜராத் வலுவாக இருந்தாலும், டெல்லி தொடர்ந்து 4-வது முறையாக இறுதிப்போட்டிக்கு செல்ல கடுமையாக போராடும். இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது.
இரண்டு அணிகளும் சம பலத்துடன் இருப்பதால், கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. லீக் போட்டிகளில் டெல்லியை குஜராத் இருமுறை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
