மக்களிடம் சென்று மகிழ்ச்சியோடு வாக்கு சேகரிக்க களத்திற்கு வந்துவிட்டோம் – எடப்பாடி பழனிசாமி

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

சட்டமன்ற தேர்தல் அறிவித்ததும், முதல் சட்டமன்றத் தொகுதியாக மயிலாப்பூர் தொகுதியில், கபாலீசுவரர் திருக்கோவிலில் இறைவனின் அருள்பெற வழிபட்டு, தொகுதி மக்களிடையே தேர்தல் பிரசாரம் மேற்கொண்டேன்.

Also Read
பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை – போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் உடல் எரிக்கப்பட்டதால் பரபரப்பு
மக்களிடம் சென்று மகிழ்ச்சியோடு வாக்கு சேகரிக்க களத்திற்கு வந்துவிட்டோம் - எடப்பாடி பழனிசாமி

தேர்தல் அறிவிப்பு வந்தது. கூட்டணி உடன்பாட்டை முடித்துவிட்டோம். தேர்தல் அறிக்கையினை மக்களிடம் அளித்துவிட்டோம். முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டோம். மக்களிடம் சென்று மகிழ்ச்சியோடு வாக்கு சேகரிக்க களத்திற்கு வந்துவிட்டோம்.

தமிழக மக்களே உங்கள் பொன்னான வாக்குகளை அஇஅதிமுக-வின் இரட்டை இலை சின்னத்திலும், கூட்டணி கட்சிகளின் தாமரை, மாம்பழம், குக்கர் ஆகிய சின்னங்களிலும் தவறாமல் செலுத்திட வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

Also Read
காதலன் ஏமாற்றியதால் விரக்தி: கமிஷனர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணால் பரபரப்பு
மக்களிடம் சென்று மகிழ்ச்சியோடு வாக்கு சேகரிக்க களத்திற்கு வந்துவிட்டோம் - எடப்பாடி பழனிசாமி

நம் கண்முன் தெரிவது அதிமுக காலம்! திமுக எனும் குடும்பக் கொள்ளையடிக்கும் தீயசக்தி வீழும் காலம்! தமிழகப் பெண்களின் அச்ச விலங்குகள் உடையப்போகும் காலம்! தமிழக மக்கள் நிம்மதியாக வாழப் போகும் காலம்! மக்கள் நம் பக்கம்! நாளை நமதே! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Also Read
பாக்கு தோப்பில் நண்பர்களுடன் உணவு சாப்பிட்டபோது சோகம்: தேனீக்கள் கொட்டியதில் இளைஞர் உயிரிழப்பு
மக்களிடம் சென்று மகிழ்ச்சியோடு வாக்கு சேகரிக்க களத்திற்கு வந்துவிட்டோம் - எடப்பாடி பழனிசாமி

Source link