நேற்றைய தினம் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்கள் குறித்தான பட்டியல் வெளியிடப்பட்டது. தவெகவுடன் யாரும் கூட்டணி அமைக்க முன்வராத நிலையில் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார் அக்கட்சியின் தலைவர் விஜய். இந்நிலையில் அதிமுகவில் இருந்து விலகிய செங்கோட்டையன் ஒன்பதாவது முறையாக கோபியில் தவெக வேட்பாளாராக களமிறங்குகிறார்.
மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பு
இந்நிலையில் திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ள மாற்றுக் கட்சியில் இருந்து வந்த பலரும் தவெக வேட்பாளாராக அறிவிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் அதிமுகவில் இருந்த தவெகவில் இணைந்த செங்கோட்டையன் போடி தொகுதியில் போட்டியிட உள்ளார். கிட்டத்தட்ட எட்டு முறை அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போடியில் போட்டியிட்டவர், முதன் முறையாக தவெகவின் விசில் சின்னத்தில் போட்டியிட உள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளாராக செங்கோட்டையன்
இது சம்பந்தமாக செய்தியாளர்களிடம் உருக்கமாக பேசியுள்ள செங்கோட்டையன், “கோபியில் எட்டு தடவை, சத்தியமங்கலத்தில் ஒருமுறை என ஒன்பது முறை வெற்றி பெற்று இருக்கிறேன். இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளாராக நிறுத்தப்பட்டு இருக்கிறேன். மக்களின் ஆதரவும், அன்பும் எங்கு சென்றாலும் உள்ளது. இந்த நாற்பது ஆண்டுக்காலம் முழு பாதுகாப்பு அளிக்கக் கூடிய நிலையில் தான் உங்கள் பணி இருந்தது என அனைவரும் சொல்கிறார்கள்.
கோபி தொகுதியில் போட்டி
எனவே எங்களை பொறுத்தவரை மக்கள் சக்தியை ஒன்றாக திரட்டி மக்களிடம் சொல்வேன். மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வேன் என தெரிவித்துள்ளார் செங்கோட்டையன். தொடர்ந்து அவர் பேசுகையில், அதிமுகவில் இருந்து தூக்கி எறியப்பட்டவன் நான். சாதாரண உறுப்பினர் கூட கிடையாது என்று சரித்திர வரலாற்றில் நடைபெறாத ஒன்று நடந்தது. ஆகவே தான் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து என்னுடைய பணிகளை ஆற்றி கொண்டிருக்கிறேன்.
மக்களின் தீர்ப்பு
இங்கு இணைந்த பிறகு மக்கள் வரவேற்பினை பெருமளவில் உணர்கிறேன். எஸ்.பி. வேலுமணி வேண்டுமானாலும் களத்தில் விஜய் இல்லை என்று சொல்லலாம். ஆனால் பதவி, சீட் கிடைக்காத பலரும் தொலைப்பேசியில் என்னிடம் பேசியது எனக்கு மட்டும் தான் தெரியும். நாளைக்கு காலம் மாறும். அவருடைய கருத்துக்கள் அனைத்தும் மக்களுடைய தீர்ப்பால் தூள் தூளாக்கப்படும்.
விஜய்யின் உரை இந்தியாவுக்கு எடுத்துக்காட்டு
ஆண்டு முடிந்தவர், ஆண்டு கொண்டிருப்பவர்களை காட்டிலும் புதிய ஆட்சி அமைய வேண்டும் என்பது தான் கருத்தாக உள்ளது. அந்த கனவினை நனவாக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகம் களத்தில் இறங்குகிறது. எதிர்கால இந்தியாவுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விஜய்யின் உரை அமைந்துள்ளது. அது மட்டுமல்லாமல் அவர் தேர்ந்தெடுத்துள்ள 234 வேட்பாளர்களும் மக்கள் சக்தியை ஒருங்கிணைக்க போகிறார்கள். வருகின்ற தேர்தலில் விஜய் ஆட்சியில் அமர்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. இவ்வாறு தவெக நிர்வாகி செங்கோட்டையன் பேசியுள்ளார்.
நான்கு முனை போட்டி
இதனிடையில் சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக சார்பில் வி.பி. பிரபு களமிறக்கப்பட்டு இருக்கிறார். இவர் செங்கோட்டையனின் நீக்கத்திற்கு பின் கோபி மேற்கு ஒன்றிய செயலாளராக நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது வேட்பாளாராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதே போல் திமுக சார்பாக நல்லசிவம், நாம் தமிழர் கட்சியில் இருந்து சீதாலட்சுமி ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
