தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி,காரைக்கால் பகுதிகளில் இன்று வானிலை வறண்டதாக இருக்கும் என வானிலை மையம் கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்றைய வானிலை
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.அதிகபட்ச வெப்பநிலை 33–34° செல்சியஸ் வரையும் குறைந்தபட்சமாக வெப்பநிலை 24–25° செல்சியஸ் வரை இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை மாநிலம் முழுவதும் வெப்பநிலை 2–4° செல்சியஸ் அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
3 நாட்களுக்கு வெயில் தீவிரம்
மேலும், மீனவர்கள் மற்றும் கடலோரப்பிரதேசங்களில் எச்சரிக்கை அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. மேலும், பொதுமக்கள் வெப்பம் அதிகரிக்கும் இந்த நாட்களில் தேவையான முன்னெச்சரிக்கைகளில் தயார் படுத்திக் கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.குறிப்பாக,வெளியில் வேலைக்கு செல்வது,நீண்ட தூரப்பயணம் அல்லது விளையாட்டு நடவடிக்கைகள் குறைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
பாதுக்காப்பாக இருக்க வேண்டிய நபர்கள்
மேலும், வெளியிலின் தாக்கத்தால் வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் உடல் நலம் பாதிக்கப்படக்கூடியவர்கள் கூடுதல் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.மேலும் அதிக வெப்பநிலையில் நீர் அதிகமாக குடிக்க வேண்டும். சூரிய ஒளியில் நேரடியாக நீண்ட நேரம் தங்காதது போன்ற எச்சரிக்கைகளை கடைப்பிடிப்பது முக்கியம்.
தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
இதனால், பொதுமக்கள் அடுத்த மூன்று நாட்களுக்கான வானிலை நிலவரத்தை கவனித்து, வெப்பத்தால் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய அறிவுறுத்தலாக உள்ளது. மேலும் தமிழகத்தில் அதிகரிக்கும் வெளியிலின் தாக்கதால் தமிழக சுகாரதாரத்துறை பொதுமக்களுக்கு பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
