மதுபோதையில் நண்பர்கள் இருவரிடையே ஏற்பட்ட தகராறு

நண்பர்கள் இருவரிடையே ஏற்பட்ட தகராறு : 

பொள்ளாச்சி மீன் கரை சாலை கண்ணப்பன் நகர் பகுதியில் உள்ள கண்ணாடி கடை செயல்பட்டு வருகிறது ஊழியர்கள் கடையை சாத்திவிட்டு வெளியில் சென்று விட்டு வந்து பார்த்தபோது கடைக்குள் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் ஒருவர் இறந்த கிடந்தார்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து அங்கு விரைந்த மேற்கு காவல் நிலைய போலீசார் இறந்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்ட போது அவர் அதே பகுதியில் இறைச்சிக் கடையில் வேலை பார்த்து வந்த ஹரி (40) என்பது தெரியவந்தது.

பின்னர் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை ஈஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார் கொலை செய்யப்பட்ட ஹரியின் நண்பன் இஸ்மாயில் என்பவரை கைது செய்துள்ளனர்.

நேற்று இருவரும் மது அருந்தியதாகவும் அப்போது இருவருக்கும் ஏற்பட்ட தகராறு ஏற்பட்டுள்ளதாகவும் அப்போது இஸ்மாயில் அவரை துரத்திச் சென்ற போது கண்ணாடி கடைக்குள் ஹரி சென்றுள்ளார் அங்கு வைத்து சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்ததாக முதற்கட்டவிசாரணையில் தெரிய வந்துள்ளது.

மது போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பன் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link