மதுப்பழக்கம், கஞ்சாவுக்கு அடிமையாகி விடாதீர் – ரஜினி அறிவுறுத்தல்

இளைஞர்களே, தயவுசெய்து மதுப்பழக்கம், கஞ்சாவுக்கு அடிமையாகி விடாதீர், அது உங்கள் வாழ்க்கையை நரகமாக்கிவிடும் என்று, நடிகர் ரஜினிகாந்த் கூறி உள்ளார்.

படிப்பில் கவனம் வேண்டும் சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது;இளைஞர்கள் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நடிகரை பார்க்க போய், அடிபட்டால் அவர்களுக்குத் தானே காயம் ஏற்படும். படிக்கின்ற கால கட்டத்தில் படிப்பில் மட்டும் தான் கவனம் செலுத்த வேண்டும். அந்த நேரத்தை அவர்கள் விட்டுவிட்டார்கள் என்றால், அவர்கள் நிறைய கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருக்கும். இதனை, அவர்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

அடிமையாகி விடாதீர்கள்முதலில் உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். தயவு செய்து மதுப்பழக்கம், கஞ்சாவுக்கு அடிமையாகாகி விடாதீர். அது உங்கள் வாழ்க்கையை நரகமாக்கிவிடும். அவ்வாறு உங்களுக்கு நண்பர்கள் அமைந்தால், அவர்கள் அருகில் கூட போகாதீர்.

கமல் உடன் படப்பிடிப்பு எப்போது?ஜெயிலர்-2 திரைப்படத்திற்கான ஷூட்டிங் இன்னும் இரண்டு மூன்று நாட்களே உள்ளது. அந்தப் படத்தின் பணிகள் விரைவில் முடிவடையும். என்னுடன் கமல் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும்.

ஜனநாயகன் முடக்கம் குறித்து… சாரி… நான் இது குறித்து கருத்து கூற விரும்பவில்லை

இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்தார்.

Source link