இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23 மற்றும் அதற்கு முதல் இரு நாட்கள் ஏப்ரல் 21 மற்றும் 22 தேதிகளிலும், வாக்கு எண்ணிக்கை நாளான மே 4-ம் தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் மட்டுமின்றி தனியார் பார்கள், நட்சத்திர விடுதிகளிலும் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நான்கு நாட்களிலும் விற்பனை மட்டுமின்றி, மதுபான தயாரிப்பு, மதுபானங்களை வாகனங்களில் கொண்டு செல்லுதல் என அனைத்து வகையான நடவடிக்கைகளுக்கும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இதே போன்று புதுச்சேரி கலால் விதிகள், அதிகாரங்களைப் பயன்படுத்தி, புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள சாராயம், கள்ளு மற்றும் மதுபானம் வழங்கும் பார்கள் மற்றும் உணவகங்கள் உட்பட அனைத்து மதுபானக் கடைகளும் ஏப்ரல் 21-ம் தேதி முதல் ஏப்ரல் 23 வரை மூட உத்தரவிட்டுள்ளார்,” என்று தெரிவித்துள்ளார்.

