மதுரையில் அரசு பேருந்தை வழிமறித்து தகராறு – 2 இளைஞர்கள் கைது

மதுரை,

மதுரை திருமலை நாயக்கர் மஹால் பகுதியில், சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்கள் வழிமறித்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனருடன் தகராறில் ஈடுபட்டனர். அவர்கள் மூவரும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

அந்த இளைஞர்களில் ஒருவர் பயணிகளிடம் முகம் சுளிக்கும் வகையில் அநாகரீகமாக நடந்துகொண்டார். இதுகுறித்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், வாகன எண்ணை வைத்து சுப்புராயர் அக்ரஹாரத்தைச் சேர்ந்த குமார் மற்றும் பெத்தானியாபுரத்தைச் சேர்ந்த அபிஷேக் ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். தப்பியோடிய மற்றொரு இளைஞரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Source link