மதுரை,
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ளது. பணம் பட்டுவாடாவை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஆங்காங்கே ஈடுபட்டுவருகின்றனர்
இந்நிலையில் மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருப்பாயூரணி பகுதியில் பிரசாரத்திற்கு வந்த கட்சியினர் அந்த பகுதி பெண்களுக்கு தலா ரூ.200 கொடுத்தனர். இதனை யாரோ ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆனால் இதுவரை தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
