மதுரை மத்திய தொகுதியில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய நீதி கட்சி சார்பில் சுந்தர்.சி வேட்புமனுத்தாக்கல் செய்தார். அதில் அவரின் சொத்து விவரம் வெளியாகி உள்ளது.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஏ.சி. சண்முகத்தின் புதிய நீதி கட்சிக்கு மதுரை மாவட்டத்தில் இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மதுரை மத்திய தொகுதி வேட்பாளராக இயக்குனர் சுந்தர் சி. களம் இறக்கப்பட்டுள்ளார். அவர் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்த வேட்புமனுத் தாக்களுக்கு அவரது மனைவியும் பாஜக துணை தலைவருமான குஷ்பூ உடன் சென்றிருந்தார். வேட்பு மனுவில் சுந்தர் .சி மற்றும் அவரது மனைவி குஷ்பூ-வின் சொத்துக்கள் பற்றி விவரங்கள் வெளியாகி உள்ளன.
சுந்தர்.சி வேட்புமனுத்தாக்கல்
அதன்படி சுந்தர். சி பெயரில்2.97 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் மற்றும் 17.7 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் உள்ளிட்ட சொத்துக்கள் உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவருடைய மனைவி குஷ்பு பெயரில் 6 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துகளும், 4.17 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலமும் உள்ளதாக பிரமாண பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டதாவது சுந்தர் சியிடம் மொத்தம் மூன்று கார்களும் குஷ்பு விடும் ஒருக்காரும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளியான சொத்து விவரம்
அதோடு பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்புவிடம் மூன்று புள்ளி 5 கிலோ தங்கமும், 24 கிலோ வெள்ளி பொருள்களும் இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சுந்தர் சிக்கு 4.12 கோடி கடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் குஷ்புவுக்கு 2.74 கோடி கடன் இருப்பதாக உள்ளிட்ட விவரங்களும் இடம்பெற்றுள்ளது. மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் இயக்குனர் சுந்தர் சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் தற்போது சிட்டிங் அமைச்சராக பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் இருக்கிறார் அவரை எதிர்த்து சுந்தர் சி போட்டியிடுவதால் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதிய நீதி கட்சி 2 தொகுதிகள்
புதிய நீதி கட்சி தலைவர் ஏசி சண்முகம் தன்னுடைய சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் சுந்தர் சிக்கு வாய்ப்பளித்ததாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது மதுரை மத்திய தொகுதியை பொருத்தவரை திமுகவின் கோட்டையாக உள்ளது குறிப்பாக முக்குலத்தோர் இஸ்லாமிய சமூகம் யாதவர் நாடார் அருந்ததியர் உள்ளிட்ட பல சமூகங்கள் பரவலாக காணப்படுகிறது இருப்பினும் முக்குலத்தோர் சமூகம் இந்த தொகுதியில் கணிசமாக உள்ளது.2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், மதுரை மத்திய தொகுதியை திமுக வென்றது. வெற்றி பெற்ற வேட்பாளர் பாலனிவேல் தியாகராஜன் 73205 வாக்குகளைப் பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஜோதி முத்துராமலிங்கம் என் 39029 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
