மத்தியில் காங்கிரஸ்- பாஜக ஆட்சி..இதுவரை புதுச்சேரி மாநில அந்தஸ்து வழங்காதது ஏன்? விஜய் கேள்வி! – vijay questions why puducherry was not granted statehood congress and bjp were in power at the centre

திமுக, காங்கிரஸ், பாஜக மத்தியில் ஆட்சியில் இருக்கும் போது இதுவரை புதுச்சேரி மாநில அந்தஸ்து வழங்காதது ஏன் என்று தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.

விஜய் பிரச்சாரம்(புகைப்படங்கள்Samayam Tamil)
வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி புதுச்சேரியில் 30 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டில் முதன் முறையாக தனித்து களமிறங்கும் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சித் தலைவர் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்க்கொள்ள உள்ளார்.புதுச்சேரியில் தவெக விஜய் பிரச்சாரம் நடத்த 23 இடங்களில் அனுமதி கேட்டு இருந்த நிலையில், 4 இடங்களில் மட்டும் விஜய் பிரச்சாரம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. மேலும் பிரச்சாரம் காலை 9.30 மணிக்கு ஆரம்பித்து, பகல் 1.30 மணிக்கு முடிக்க வேண்டும் என்று கூறியிருந்தது.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் 2026

அதன்படி,புதுவை தட்டாஞ்சாவடியில் முதற்கட்டமான 12 வேட்பாளர்களை ஆதரித்து தவெக தலைவர் விஜய் வாக்கு சேகரித்தார். அப்போது மக்கள் மத்தியில் பேசியவர்,புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் முதன் முறையாக போட்டியிட உள்ளது. இங்கே களத்தில் மக்களோடு மக்களாக நிற்பவர்களை தான் நான் வேட்பாளராக தேர்வு செய்திருக்கிறேன். அவர்களை நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும். அதேபோல் நம்முடன் கூட்டணி வைத்திருக்கும் மனிதநேய கட்சி வேட்பாளர்களுக்கும் நீங்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும். இரண்டு கூட்டணி இருக்கிறது. நீங்கள் தனியாக வந்து என்ன செய்ய போறீங்கனு உங்களுக்கு கேள்வி எழும்.அதற்கு பதில் சொல்ல் வேண்டிய இடத்தில் நான் இருக்கிறேன்.

வில்லிவாக்கம் ரியல் போட்டி யாருக்கு இடையில்?

புதுச்சேரியில் ஏற்கெனவே இருக்கும் இரண்டு கூட்டணிகளை பற்றி கொஞ்சம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். திமுக காங்கிரஸ் கூட்டணியில், காங்கிரஸ் மட்டுமே ஐந்து ஆறு முறைகளுக்கு மேலே ஆட்சியில் இருந்தது. அந்த கூட்டணியில் இருந்த ஒரு தலைவர் மக்களை மட்டுமே ஏமாற்றவில்லை.. அவர்களுடைய தலைவரையே வெட்ட வெளிச்சமாக எப்படி ஏமாற்றினார் என்பதே உலகமே பார்த்து கைதட்டி சிரித்தது. அதன் பிறகு அந்த கட்சி தற்பொழுது எந்த நிலைமையில் இருக்கிறது என்பது உங்கள் அனைவருக்குமே தெரியும். அதேபோல் திமுகவும் புதுச்சேரியில் இரண்டு மூன்று முறை ஆட்சியில் இருந்தார்கள். இப்போது இரண்டும் கூட்டணி அமைத்துள்ளது. பேருக்கு தான் கூட்டணி.

தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்

திமுக- காங்கிரஸ் கூட்டணி என்று சொல்லிக்கொண்டு பல தொகுதிகளில் ஒருத்தரை ஒருத்தர் எதிர்த்து நிற்கிறார்கள். திமுகவும் காங்கிரசும் குழப்ப விளைவிக்கக்கூடிய அணியாக தான் உள்ளது. அதே போல், என்.ஆர். காங்கிரஸ்- பாஜக கூட்டணியும் சேர்ந்து இருக்க முடியாத நிலையில், சோர்ந்து போன கூட்டணியாக உள்ளது என்று விஜய் விமர்சித்தார்.மேலும் இவர்கள் இது நம்மை வைத்து அவர்களாக ஒரு அரசியலை நடத்தினார்கள். இதில் ஒரு அரசியல் வியாபாரமும் நடக்கிறது. தமிழ்நாட்டில் எப்படி இரண்டு பேர் ரகசிய கூட்டணி வைத்துளார்களோ.. அதே பார்முலா புதுச்சேரியிலும்.

புதுச்சேரி மாநில அந்தஸ்து பிரச்சாரம்

இப்போது என்ன ஆச்சு நாம் யாருடனும், மறைமுமாகவோ, நேரடியாகவோ ஒட்டி ஓரவாடவில்லை என்பது நாம் தனித்து போடியிடுவதில் தெரிந்துவிட்டது. தொடர்ந்து பேசிய விஜய், புதுச்சேரியிலும் சரி.. மத்தியிலும் சரி காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஓன்றியத்தில் ஆட்சியில் இருக்கிறார்கள்.. இப்போது இருப்பவர்கள்.. ஆனால் இதுவரைக்கும் ஏன் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து அவர்களால் கொண்டுவர முடியவில்லை. சுஷ்மா சுவராஜ் 20 ஆண்டுகளுக்கு முன்பே புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தியிருந்தார். ஆனால் அது ஏன் நடைமுறையிலில்லை?இதனை கேட்டால் விஜய்க்கு அரசியல் ரசியல் அனுபவம் இல்லை என்று கூறுகிறார்கள். புதுச்சேரியில் தவெக ஆட்சிக்கு வந்தால் மாநில அந்தஸ்து பெற முழுமையாக முயற்சிப்போம் என்று தவெக தலைவர் விஜய் கூறினார்.