மனைவியுடன் தகராறு: திருமணமான ஒரே மாதத்தில் புது மாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் அண்ணா நகர் காலனியை சேர்ந்தவர் சிங்காரம். இவரது மனைவி பார்வதி. இந்த தம்பதியின் மகன் அழகு மாரியப்பன் (29 வயது). தனியார் பேருந்து டிரைவர். இவருக்கும் புதியம்புத்தூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந்தேதி திருமணம் நடந்தது.

Also Read
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 காவலர்களும் குற்றவாளிகள் என தீர்ப்பு
கோப்புப்படம்

அழகு மாரியப்பனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அழகு மாரியப்பன், மனம் உடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் அனைவரும் சாப்பிட்டுவிட்டு தூங்கினர். ஏற்கனவே மனவேதனையில் இருந்த அழகு மாரியப்பன் நேற்று அதிகாலையில் தனது வீட்டு ஆட்டு தொழுவத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தூங்கி எழுந்த உடன் வெளியே வந்த அவரது பெற்றோர் இந்த காட்சியை கண்டு கதறி அழுதனர்.

Also Read
“அப்பா” என்ற பட்டத்திற்கு ஆசைப்படும் ஸ்டாலின் தமிழகப் பெண்களை பாதுகாக்கத் தவறிவிட்டார் – நயினார் நாகேந்திரன்
கோப்புப்படம்

இதுகுறித்து தகவல் அறிந்ததும் குளத்தூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அழகு மாரியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான ஒரே மாதத்தில் புது மாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Also Read
மாலையில் மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை… சவரன் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்துக்கு கீழ் வந்தது
கோப்புப்படம்

Source link