மம்முட்டியின் “பாதயாத்ரா” படப்பிடிப்பு நிறைவு

மலையாள திரையுலகில் டாப் நடிகராக இருப்பவர் மம்முட்டி . 74 வயது ஆகும் மம்முட்டி , இப்போதும் இளமை மாறாமல் தற்போதுள்ள ஹீரோக்களுக்கு போட்டி கொடுத்து வருகிறார். வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவரும் நடிகர் மம்முட்டி, தற்போது ‘பேட்ரியாட்’ எனும் அரசியல் கதைக்களம் கொண்ட படத்தில் நடித்துள்ளார்.

நீண்டகாலத்திற்குப் பிறகு மலையாள திரையுலகின் ஜாம்பவான் நடிகர்களான மம்முட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடித்துள்ள இப்படம் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. மகேஷ் நாராயணன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்துள்ளது. இப்படம் வரும் ஏப்ரல் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாகின்றது.

அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் மம்முட்டி நடிக்கும் புதிய திரைப்படம் ‘பாதயாத்ரா’. அனந்தரம், மதிலுகள், விதேயன் ஆகிய திரைப்படங்களில் இணைந்த இக்கூட்டணி 32 ஆண்டுகள் கழித்து மீண்டும் பாதயாத்ராவில் இணைந்துள்ளனர். இதனை, துல்கர் சல்மான் தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கேரளத்தின் காக்கநாடு பகுதியில் கடந்த சில நாள்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், முழுமையாக நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடூர் கோபாலகிருஷ்ணன் – மம்முட்டி கூட்டணி திரைப்படங்களுக்கு கேரளத்தில் நல்ல வரவேற்பு இருந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link