மம்முட்டி – மோகன்லால் கூட்டணி படம் திடீர் தள்ளிவைப்பு… ரசிகர்கள் அதிர்ச்சி

சென்னை,

மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் மம்முட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடித்துள்ள “பேட்ரியாட்” திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.

மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் பகத் பாசில், நயன்தாரா, ரேவதி, கிரேஷ் ஆண்டனி, தர்ஷனா ராஜேந்திரன் மற்றும் ரஜீவ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Also Read
’ஆயிரத்தில் ஒருவன் 2’-க்கு ’நோ’ சொன்ன ஆண்ட்ரியா… ரசிகர்கள் ஷாக்
மம்முட்டி – மோகன்லால் கூட்டணி படம் திடீர் தள்ளிவைப்பு... ரசிகர்கள் அதிர்ச்சி

முன்னதாக ஏப்ரல் 23-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இந்த படம், தற்போது மே 1-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Source link