மருத்துவ படிப்பை நிறைவு செய்த நடிகை ஶ்ரீலீலா

அமெரிக்காவின் மிச்சிகனில் பிறந்து, பெங்களூருவில் வளர்ந்தவர் ஶ்ரீலீலா. கடந்த 2019-ம் ஆண்டு ‘கிஸ்’ திரைப்படம் மூலம் கன்னடத்தில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கில் ‘பகவந்த் கேசரி’, ‘குண்டூர்காரம்’ திரைப்படங்கள் மூலம் தெலுங்கில் முன்னணி நடிகையானார்.

Also Read
தங்கம் விலை ஒரே நாளில் 2-வது முறையாக உயர்வு… நிலவரம் என்ன..?
மருத்துவ படிப்பை நிறைவு செய்த நடிகை ஶ்ரீலீலா

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘பராசக்தி’ படத்தில் நடித்து பாராட்டுகளைப் பெற்றார். தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ‘தனுஷ் 55’ படத்தில் ஶ்ரீலீலா நடிக்கிறார். இதனிடையே கடந்த 2020-ம் ஆண்டு டி.ஒய். பாட்டீல் மருத்துவக் கல்லூரியில் ஶ்ரீலீலா தனது மருத்துவக் கல்வியைத் தொடங்கினார்.

Also Read
கனடாவில் பள்ளி வளாகத்தில் நடந்த கொடூரமான துப்பாக்கி சூட்டால் அதிர்ச்சியடைந்தேன் – பிரதமர் மோடி
மருத்துவ படிப்பை நிறைவு செய்த நடிகை ஶ்ரீலீலா

இந்த நிலையில், தனது மருத்துவப் படிப்பை ஶ்ரீலீலா நிறைவு செய்துள்ளார். நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்து கொண்டு பட்டம் பெற்றார். இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Also Read
கூடலூர் வனப்பகுதியில் தொடரும் தங்க வேட்டை: கேரள ஆசாமிகளை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை
மருத்துவ படிப்பை நிறைவு செய்த நடிகை ஶ்ரீலீலா

Source link